மகேஷ் பாபு போல மாறுகிறாரா அஜித்?.. விடாமுயற்சி படத்தில் நடந்த அதிரடி மாற்றம்.. அடுத்த விக்கெட் காலி?
சென்னை: விடாமுயற்சி படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கையை வைத்து பெருமுயற்சி செய்து வருகிறார் நடிகர் அஜித் குமார். திடீரென சமீபத்தில் சென்னைக்கு நடிகர் அஜித் வந்து சில நாட்கள் ஓய்வெடுத்து விட்டு மீண்டும் அஜர்பைஜானுக்கு ஷூட்டிங் கிளம்பி சென்று விட்டார்.
இந்நிலையில், திடீரென விடாமுயற்சி படக்குழுவில் அதிரடி மாற்றம் ஒன்று நிகழ்ந்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஒளிப்பதிவாளர் மாற்றம்: இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார், திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோர் நடித்து வரும் விடாமுயற்சி படத்தை ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா இதுவரை ஒளிப்பதிவு செய்து வந்தார். இந்திய திரையுலகின் முன்னனி ஒளிப்பதிவாளரான நீரவ் ஷா திடீரென அஜர்பைஜானில் மீண்டும் தொடங்கி உள்ள புதிய ஷெட்யூலில் இல்லை என்கிற ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.
நீரவ் ஷாவுக்கு பதில் யார்?: நீரவ் ஷாவுக்கு பதிலாக தற்போது ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அஜித்தின் பில்லா படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வந்த நீரவ் ஷா திடீரென மாற்றப்பட்டு தற்போது ஆரம்பம் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ஓம் பிரகாஷ் இந்த ஒரு ஷெட்யூலுக்கு மாற்றப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தற்காலிகமாகவா அல்லது படத்தில் இருந்து நீரவ் ஷா வெளியேற்றப்பட்டு புதிய ஒளிப்பதிவாளரை ஒப்பந்தம் செய்யவே அஜித் சென்னை வந்தாரா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
மகேஷ் பாபுவை போல: குண்டூர் காரம் படத்தின் நாயகி பூஜா ஹெக்டே மற்றும் ஒளிப்பதிவாளரை எல்லாம் மகேஷ் பாபு மாற்றியதை போல தற்போது இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்தே தீர வேண்டும் என்கிற வெறியில் நடிகர் அஜித் குமார் விக்னேஷ் சிவனை தொடர்ந்து தற்போது ஒளிப்பதிவாளரையும் ஏகே 62 படத்திற்கு மாற்றி விட்டாரா? என்றும் சினிமா வட்டாரத்தில் கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால், இது தற்காலிக மாற்றம் என்றே கூறப்படுகிறது. விரைவில் உண்மை நிலவரம் தெரியவரும் என தெரிகிறது.
ஆயுத பூஜை ரிலீஸ்: இந்த ஆண்டு ஆயுத பூஜைக்கு லியோ படம் வெளியாகி பெரிய வெற்றிப் பெற்றதை போலவே தனது விடாமுயற்சி படத்தையும் ஆயுத பூஜைக்கு வெளியிட அஜித் பிளான் செய்து வருவதாகவும் கூறுகின்ற்னார்.
ஹாலிவுட் படமா?: லியோ படம் ஹிஸ்டர் ஆஃப் வயலென்ஸ் ஹாலிவுட் படத்தை இன்ஸ்பயர் செய்து எடுக்கப்பட்ட நிலையில், பிரேக்டவுன் எனும் ஹாலிவுட் படத்தை தழுவி விடாமுயற்சி உருவாகி வருகிறது என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. கூடிய விரைவில் படப்பிடிப்பு முடிந்து இயக்குநர் மகிழ் திருமேனியே அதை ரிவீல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











