பிவி சிந்து திருமணத்தில் நடனமாடினாரா அஜித்.. உண்மை என்ன?.. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!
சென்னை: நயன்தாரா திருமணம், விஜயகாந்த் மறைவு உள்ளிட்டவற்றை தவிர்த்த நடிகர் அஜித் பி.வி. சிந்து திருமணத்தில் மட்டும் கலந்துக் கொண்டது ஏன் என்கிற கேள்விகள் ஒருபுறமும் பி.வி. சிந்து திருமணத்தில் நடிகர் அஜித் ஆட்டம் போட்டிருக்கிறார் பாருங்க என ஒரு வீடியோவையே நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வருகின்றனர்.
உடல் எடை அதிகரித்த நிலையில், அதே தோற்றத்தில் பல படங்களில் தொடர்ந்து நடித்து வந்த அஜித் குமாருக்கு எதிராக ஏகப்பட்ட உருவ கேலி ட்ரோல்கள் குவிந்தன. ஆனால், தற்போது திடீரென நடிகர் அஜித் தனது உடல் எடையை 20 கிலோவுக்கும் அதிகமாக குறைத்து பரமசிவன் படத்திற்காக எப்படி ஸ்லிம்மானாரோ அந்தளவுக்கு ஆளே மாறி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி படங்களில் ஸ்லிம்மான அஜித்தை சில காட்சிகளில் ரசிகர்கள் பார்த்து கொண்டாடவே இந்தளவுக்கு மெனக்கெட்டுள்ளார். மேலும், கார் ரேஸில் கலந்துக் கொள்வதற்காகவும் அஜித் தனது உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளதாக கூறுகின்றனர்.

பி.வி. சிந்து திருமணத்திற்கு அஜித் சென்றது ஏன்?: நடிகர் அஜித் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திருமணங்களுக்கு மட்டுமே சென்று வருகிறார். அரசியல் மற்றும் சினிமா என பொது வெளி பிரபலங்கள் உடன் பணியாற்றுபவர்களின் திருமணம் என எதற்குமே அவர் கலந்துக் கொள்ளாமல் தவிர்த்து வருகிறார். இந்நிலையில், பி.வி. சிந்து திருமணத்துக்கு அஜித் செல்ல ஓடோடி வந்து பி.வி. சிந்து அஜித்தை வரவேற்ற காட்சிகளை பார்த்த ரசிகர்கள் அஜித்துக்கும் பி.வி. சிந்துவுக்கும் என்ன நட்பு எனக் கேட்டு வருகின்றனர். ஷாலினி பேட்மிண்டன் வீராங்கனை என்றும் அவரும் பி.வி. சிந்துவும் நட்பாக பல ஆண்டுகள் பழகி வந்த நிலையில் தான் அஜித் குமார் இந்த திருமணத்துக்குச் சென்றார் என சில தகவல்கள் உலாவி வருகின்றன.

அஜித் நடனமாடினாரா?: பி.வி. சிந்து திருமணத்தில் நடிகர் அஜித் குமார் "ஊ சொல்றியா மாமா" பாடலுக்கு நடனமாடியது போன்ற ஒரு வீடியோவை நெட்டிசன்கள் அதிகளவில் வைரலாக்கி வருகின்றனர். அந்த வீடியோவை பார்த்த பலரும் அஜித் குமாரா இப்படியொரு ஆட்டத்தை போட்டுள்ளார் என ஆச்சர்யத்தில் கண்களை துடைத்துக் கொண்டும், ஜூம் செய்தும் பார்த்து வருகின்றனர். ஆனால், அது வேறு ஒரு நபர் என்பது தான் உண்மை என ஆதாரங்களுடன் மேலும், சில வீடியோக்களை அஜித் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
விடாமுயற்சி ஃபர்ஸ்ட் சிங்கிள்: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி படத்தை வரும் பொங்கலுக்கு வெளியிடப்போவதாக அறிவித்துள்ள நிலையில், அனிருத் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை இன்று வெளியிடுகிறார். "சாவடிக்க" என்கிற வரிகளுடன் உருவாகியுள்ள இந்த பாடல் ரசிகர்களை கவரும் என்றும் அந்த பாடலில் தான் அஜித் உண்மையாகவே ஆட்டம் போட்டிருப்பார் என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன.
மோசமான சண்டை: சோஷியல் மீடியாவில் நேற்று முழுவதும் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான இருவரும் காலமானதாக தனித்தனியே ஹாஷ்டேக்குகளை போட்டு வரம்புமீறி வந்த நிலையில், அஜித் நடனமாடுவது போல இந்த வீடியோவையும் எடிட் செய்து வைரலாக்கி வருகின்றனர் என சண்டைகள் தொடர்ந்துக் கொண்டே இருக்கின்றன.


Click it and Unblock the Notifications











