அஜித் படத்துக்கே 9 மணி ஷோ இல்லையா?.. 11.30 மணிக்கு மேலதான் படம்.. கடைசி வரை விடாமுயற்சிக்கு சிக்கல்!

சென்னை: பொதுவாக தளபதி விஜய் படங்கள் ரிலீஸ் ஆகும்போது தான் கடைசி நேரம் வரை சிறப்புக் காட்சிக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கலாக இருக்கும். ஆனால், இந்த முறை லைகா தயாரிப்பில் அஜித் குமார் நடித்துள்ள விடாமுயற்சி படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், இதுவரை 9 மணி காட்சிக்கு கூட அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

பல திரையரங்குகள் காலை 11.30 மணிக்கும் 12 மணிக்கும் தான் விடாமுயற்சி படத்துக்கான டிக்கெட் முன்பதிவை தொடங்கியிருக்கின்றன. சில திரையரங்குகளில் 9 மணி மற்றும் 10 மணி காட்சிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த திரையரங்குகளும் 11.30 மணி காட்சிக்கு டிக்கெட்டுகளை மாற்றிக் கொள்ள ரசிகர்களை அறிவுறுத்தி வருகின்றன.

vidamuyarchi ajith kumar

விடாமுயற்சி படம் பண்டிகை தேதியில் வெளியாகாத நிலையில், சிறப்புக் காட்சிக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதா என்கிற கேள்வி எழுந்துள்ளது. வெளிநாடுகளிலும் பிற மாநிலங்களிலும் அதிகாலையிலேயே விடாமுயற்சி படம் வெளியாகவுள்ள நிலையில், இன்று நிச்சயம் காலை 9 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி கிடைக்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ஏகப்பட்ட தடைகள்: 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு கடைசியாக அஜித் குமார் தளபதி விஜய்யின் வாரிசு படத்துடன் மோதி பார்த்துவிட வேண்டும் என துணிவு படத்தை ஒரே நாளில் இறக்கினார். அதன் பின்னர், விஜய் நடித்து லியோ மற்றும் கோட் என 2 படங்கள் வெளியாகி விட்டன. விடாமுயற்சி படத்தை லியோவுக்கு போட்டியாக ரிலீஸ் செய்ய நினைத்தார். ஆரம்பத்தில் இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க வேண்டிய நிலையில், அதிரடியாக அவர் மாற்றப்பட்டு அஜித் கொடுத்த கதையை மகிழ் திருமேனி அதன் பின்னர் இயக்கினார். லைகாவுக்கு ஏற்பட்ட நஷ்டம் காரணமாக 6 மாதங்கள் விடாமுயற்சி படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

குட் பேட் அக்லி: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்து முடித்து அந்த படத்தையே பொங்கலுக்கு ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டார். ஆனால், அதற்குள் லைகா மீண்டும் விடாமுயற்சி படத்தை ஆரம்பிக்க அந்த படத்தை பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டனர். ஆனால், கடைசியில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக பிப்ரவரி 6ம் தேதி விடாமுயற்சி திரைப்படமும் ஏப்ரல் 10ம் தேதி குட் பேட் அக்லி படமும் வெளியாகின்றன.

vidamuyarchi ajith kumar

சிறப்புக் காட்சிக்கு அனுமதி கிடைக்குமா?: அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதுவரை அந்த படத்திற்கான முதல் நாள் டிக்கெட்டுகள் பல திரையரங்குகளில் விற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. இன்னமும் ரசிகர்கள் 9 மணி காட்சிக்காக காத்திருக்கின்றனர். சிறப்பு காட்சிக்கு இதுவரை அனுமதி கிடைக்காத நிலையில், தமிழ்நாட்டில் FDFS 11.30 மணிக்குத்தானா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. ஆனால், எப்படியாவது இன்று மதியத்துக்குள் 9 மணி காட்சிக்கான அனுமதி கிடைத்துவிடும் என படக்குழுவும் ரசிகர்களும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

வசூல் பாதிக்கும்: துணிவு திரைப்படம் நள்ளிரவு 1 மணி காட்சியெல்லாம் வெளியானது. ஆனால், விடாமுயற்சி திரைப்படம் 11.30 மணிக்குத்தான் தமிழ்நாட்டில் திரையிடப்பட்டால் முதல் நாள் வசூல் அதிகப்படியாக 20 முதல் 25 கோடி தான் வரும் என கணிப்புகள் வெளியாகி உள்ளன. 9 மணி காட்சிகள் தொடங்கினால் தான் 30 கோடி வரை வசூல் வரும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X