விடாமுயற்சி டிராப்பா?.. அதிரடியாக அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ டைட்டில் அறிவிப்பு வர இதுதான் காரணமா?

சென்னை: நடிகர் அஜித்குமாரின் 63-வது படத்தின் அறிவிப்பு திடீரென வருவதற்கு பின்னணியில் விடாமுயற்சி படம் கைவிடப்பட்டதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.

லைகா தயாரிப்பில் நடிகர் அஜித் 62-வது படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து அந்தப் படத்திற்காக கால்ஷீட்டை ஒதுக்கி ஒரு வருடம் ஆகிறது.

Did Ajith left from Vidamuyarchi and joined Good Bad Ugly

ஆனால் இன்னமும் விடாமுயற்சி திரைப்படம் சூட்டிங் நிறைவடையாமல் அடுத்த கட்ட படப்பிடிப்புக்கும் செல்லாமல் படக்குழுவினர் காலம் தாழ்த்தி வருவதற்கான காரணம் என்ன என்கிற கேள்வி பலமாக எழுந்துள்ளது.

குட் பேட் அக்லி அறிவிப்பு: எப்போதுமே நடிகர் அஜித் தனது படத்தை முடித்துவிட்டு தான் அடுத்த படத்தின் அறிவிப்பை அறிவிப்பார். ஆனால், விடாமுயற்சி படத்தின் அப்டேட் கூட வெளியாகாத நிலையில், ஏகே 63 படத்தின் டைட்டில் லுக் நேற்று அதிரடியாக வெளியாகி இருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சிட்டிசன், வில்லன், ரெட் என ஆரம்ப காலத்தில் ஆங்கில தலைப்பில் நடித்து வந்த நடிகர் அஜித் அதன் பின்னர் தமிழ் தலைப்புகளில் நடித்து வந்தார். இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆங்கில தலைப்பில் அஜித் நடிக்கப் போவதாக வெளியான அறிவிப்புக்கு எதிராக ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்து வருகின்றன.

விடாமுயற்சி டிராப்பா?: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்குமாரின் 62-வது படத்தை உருவாக்கப் போகிறோம் என லைகா நிறுவனம் ஆரம்பத்தில் அறிவித்தது. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல விக்னேஷ் சிவன் அந்த படத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர், மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் 62-வது படம் விடாமுயற்சி என டைட்டில் போஸ்டர் கடந்த ஆண்டு மே ஒன்றாம் தேதி அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது. அந்த படத்திற்காக அஜர் பைஜானில் பல மாதங்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஆனால் இன்னமும் அந்த படம் நிறைவடையவில்லை என்றும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட நிலையில், திடீரென அஜித்தின் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில் விடாமுயற்சி படம் பட்டு விட்டதா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

அமைதி காக்கும் லைகா: அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடி குறித்த அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டு இந்த வீண் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்குமா? அல்லது இந்தியன் 2 திரைப்படம் கிடப்பில் போடப்பட்டு, விக்ரம் படத்தை முடித்துவிட்டு கமல்ஹாசன் மீண்டும் வந்து இந்தியன் 2வில் நடித்து வருவதைப் போல குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு விடாமுயற்சி ஆரம்பிக்குமா என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி உள்ளனர். ஆனால், லைகா நிறுவனம் எந்தவொரு பதிலையும் சொல்லாமல் அமைதி காத்து வருகிறது.

மகிழ் திருமேனி பண்ண தவறு: நடிகர் அஜித் குமார் படத்தின் வாய்ப்பு கிடைத்தும் சரியாக பிளான் பண்ணாமல் வெளிநாட்டில் எடுத்த காட்சிகளை மீண்டும் மீண்டும் எடிட் செய்து பார்த்து சரியாக வரவில்லை என இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியதால் தான் கால தாமதம் ஏற்பட்டு விட்டதாகவும் சொன்ன தேதியை விட பல மாத கால்ஷீட்டை மகிழ் திருமேனி வீண் அடித்த நிலையில், அஜித் அப்செட் ஆகி விலகி விட்டார் என்றும் கூறுகின்றனர். எது எப்படியோ உண்மை விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X