எதிர்பார்ப்பை எகிற வைத்த வலிமை மோஷன் போஸ்டர்...பீஸ்ட் சாதனையை முறியடிக்குமா ?

சென்னை : அஜித் நடிக்கும் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்ற தகவல் வெளியானது முதல் சோஷியல் மீடியாக்கள் முதல் செய்திகள் வரை எங்கு பார்த்தாலும் இது பற்றிய பேச்சாக தான் உள்ளது. அஜித்தின் பழைய ஸ்டில்களை பதிவிட்டு சிலர் டிரோல் செய்து வருகின்றனர்.

ட்விட்டரில் டிரெண்டிலும் அஜித், வலிமை தொடர்பான ஹேஷ்டாக்குகளே அதிக அளவில் உருவாக்கப்பட்டு, டிரெண்டிங் ஆக்கப்பட்டுள்ளது. அஜித்தின் விஸ்வாசம் போஸ்டர், அந்த படத்தில் அஜித் பேசும் பஞ்ச் டயலாக்குகளை அதிகம் பதிவிட்டு, வலிமை மோஷன் போஸ்டர் வெளியாகும் தகவலை கவுன்டவுன் வைத்து எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

விவாதத்தை துவங்கிய ரசிகர்கள்

விவாதத்தை துவங்கிய ரசிகர்கள்

இதற்கிடையில் வழக்கம் போல் யார் நடிக்கும் ஃபஸ்ட்லுக் போஸ்டர் சாதனை படைக்கும் என அஜித் - விஜய் ரசிகர்கள் இணையத்தில் விவாதிக்க துவங்கி விட்டனர். ஏற்கனவே விஜய் ரசிகர்கள் பீஸ்ட் படம் பற்றிய தகவல்களை கொண்டாடி வரும் நிலையில், தற்போது இதுவும் சேர்ந்துள்ளது.

சாதனை படைத்த பீஸ்ட் ஃபஸ்ட்லுக்

சாதனை படைத்த பீஸ்ட் ஃபஸ்ட்லுக்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்தும் வரும் தளபதி 65 படத்திற்கு பீஸ்ட் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு பீஸ்ட் படத்தின் டைட்டில், ஃபஸ்ட்லுக் மற்றும் இரண்டாவது லுக்கை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மாஸாக வெளியிட்டது. வெளியிட்ட சில நிமிடங்களிலேயே இந்த போஸ்டர்களை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி விட்டனர்.

பீஸ்ட்டை கொண்டாடிய ரசிகர்கள்

பீஸ்ட்டை கொண்டாடிய ரசிகர்கள்

அது மட்டுமல்ல இந்திய அளவில் அதிகமானவர்களால் மிக குறுகிய நேரத்தில் பார்க்கப்பட்ட, பகிரப்பட்ட ஃபஸ்ட்லுக் என்ற சாதனையையும் பீஸ்ட் ஃபஸ்ட்லுக் நிகழ்த்தியது. மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை கொண்டாடிய கையோடு, பீஸ்ட் படத்தில் நடிக்க துவங்கி விட்டார் விஜய். இதற்கே அவரது ரசிகர்கள் ஃபஸ்ட்லுக் சாதனை படைக்க வைத்து விட்டனர்.

எகிறும் எதிர்பார்ப்பு

எகிறும் எதிர்பார்ப்பு

ஆனால் அஜித் நடிக்கும் வலிமை படம் கடந்த 2 ஆண்டுகளாக அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, அப்டேட் கேட்டே படத்தின் பெயரை உலக ஃபேமஸ் ஆக்கி விட்டனர் அஜித் ரசிகர்கள். 2 ஆண்டுகள் காத்திருப்பிற்கு பிறகு வரும் கொண்டாட்டம். அதுமட்டுமின்றி மோஷன் போஸ்டருடன் ஃபஸ்ட்லுக் போஸ்டர், படம் ரிலீசாகும் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தபட்சம் அஜித்தின் 6 மாஸ் ஸ்டில்களாவது வெளியிடப்படும் என கூறுகிறார்கள்.

அஜித் ரசிகர்கள் சும்மா விடுவார்களா

அஜித் ரசிகர்கள் சும்மா விடுவார்களா

அதனால் அஜித் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு அளவே இருக்காது என்றே சொல்லலாம். ஏற்கனவே சாமி ஆடும் கோயில் பூசாரி, பிரதமர் என ஒருவரையும் விட்டு வைக்காமல் வலிமை அப்டேட் கேட்டவர்கள், படத்தின் மோஷன் போஸ்டர் வந்தால் சும்மாவா இருப்பார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X