திருமணத்தின்போது சூப்பர் ஸ்டாரை அவமதித்தாரா அம்பானி மகன்?: வீடியோ இதோ
மும்பை: தனது திருமணத்தின்போது ஆகாஷ் அம்பானி ஷாருக்கானை அவமதித்துவிட்டதாக அவரின் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.
தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷுக்கும், ஸ்லோகா மேத்தாவுக்கும் மும்பையில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. அந்த திருமண நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் திருமணத்தின்போது எடுத்த வீடியோ ஒன்றை பார்த்துவிட்டு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர்.
ஷாருக்கான்
கூட்டத்தில் ஆடிக் கொண்டிருந்த ஆகாஷ் அம்பானி அங்கு வந்த ஷாருக்கானை ஒதுங்கிப் போகுமாறு கூறிவிட்டு தனது அம்மா நீத்தாவை அழைத்து வந்து டான்ஸ் ஆடும் வீடியோ வெளியானது.

கோபம்
ஆகாஷ் ஷாருக்கானை விரட்டிவிட்டு அவரின் மனைவி கவுரி மற்றும் தனது அம்மாவுடன் ஆடியதை பார்த்த ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர். அது எப்படி எங்கள் ஷாருக்கானை ஆகாஷ் அவமதிக்கலாம் என்று கொந்தளித்துள்ளனர்.

கவுரி
ஷாருக்கானின் மனைவியுடன் சேர்ந்து ஆட அவரை ஓரங்கட்டிவிட்டார் ஆகாஷ் என்று நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர். வீடியோவின் ஓரமாக ஆடிக் கொண்டிருந்தது தான் ஷாருக்கின் மனைவி.

அம்பானி
பெரிய அம்பானி வீட்டு கல்யாணம் என்று போய் இப்படி அசிங்கப்பட்டது தேவையா என்று ஷாருக்கான் ரசிகர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆகாஷ் கல்யாண குஷியில் ஏதோ அப்படி செய்துவிட்டார். ஷாருக்கானுக்கே கோபம் வரவில்லை, அவரின் ரசிகர்களுக்கு ஏன் கோபம் வரணும் என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











