அவர் நடிகர் என சொல்லிக்கவே லாயக்கில்லை.. இளம் நடிகர் மீது பாய்ந்த அலா வைகுந்தபுரமுலோ தயாரிப்பாளர்?

மும்பை: அல்லு அர்ஜுன் தயாரிப்பாளருக்கும் பாலிவுட் நடிகருக்கும் இடையே பெரும் வாக்குவாதமே நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த அலா வைகுந்தபுரமுலோ திரைப்படம் இந்தியில் டப் செய்யப்பட்ட நிலையில், குடியரசு தினத்தன்று ரிலீஸாக இருந்தது.

ஆனால், அந்த படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்து வருவதால் டப்பிங் படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது என கார்த்திக் ஆர்யான் பிரச்சனை பண்ணது தயாரிப்பாளரை கடுப்பில் ஆழ்த்தி உள்ளது.

நிறுத்தப்பட்ட ரிலீஸ்

நிறுத்தப்பட்ட ரிலீஸ்

இயக்குநர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டு தெலுங்கில் வெளியான அலா வைகுந்தபுரமுலோ திரைப்படம் பாலிவுட்டில் இந்தி டப்பிங் செய்யப்பட்டு ஜனவரி 26ம் தேதி திரைக்கு வரவிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அந்த படத்தை ரீமேக் செய்யும் படக்குழு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அதன் ரிலீஸை படக்குழு நிறுத்தி உள்ளது.

2 கோடிக்கு டப்பிங்

2 கோடிக்கு டப்பிங்

அலா வைகுந்தபுரமுலோ திரைப்படத்தின் தயாரிப்பாளர் மணிஷ் ஷா ரூ. 2 கோடி செலவு செயது இந்தியில் டப்பிங் செய்த நிலையில், அந்த படத்தை வெளியிடாமல் நிறுத்தி உள்ளார். இதற்கு காரணம் இந்தியில் இதே படம் ஷேஷாடா (Shehzada) எனும் டைட்டிலில் நடிகர் கார்த்திக் ஆர்யான் நடிப்பில் உருவாகி வருவது தான்.

40 கோடி நஷ்டம்

40 கோடி நஷ்டம்

சமீபத்தில் புஷ்பா திரைப்படம் இந்தியில் வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்திய நிலையில், அலா வைகுந்தபுரமுலோ படத்தை வெளியிட்டால் ரூ. 40 கோடி வசூல் வந்திருக்கும் என்றும் தற்போது அந்த படத்தை நிறுத்தியதால் 40 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் கூறியுள்ளார். இருந்தாலும், இந்தி படத்தை ரீமேக் செய்யும் தயாரிப்பாளர் கேட்டுக் கொண்டதாக அந்த படத்தை வெளியிடும் முடிவை தள்ளிப் போட்டு இருக்கிறார்.

நடிகன்னு சொல்லிக்கவே தகுதியில்லை

நடிகன்னு சொல்லிக்கவே தகுதியில்லை

இந்நிலையில், கார்த்திக் ஆர்யான் தயாரிப்பாளருக்கு மிரட்டல் விடுத்த செய்தியை அறிந்த அவர், ஷேஷாடா படத்தில் அல்லு அர்ஜுன் நடித்த கதாபாத்திரத்தில் நடித்து வரும் பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யானை எல்லாம் ஒரு புரொபஷனல் நடிகர் என சொல்லிக்கவே தகுதியில்லாதவர் என்றும் அலா வைகுந்தபுரமுலோ தயாரிப்பாளர் மணிஷ் ஷா கூறியதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Recommended Video

நான் பிறந்த ஊர்ல என்ன இப்படி ரசிக்குறாங்க! | Allu Arjun speech in Pushpa Success Meet
படத்திலிருந்து வெளியேறிடுவேன்

படத்திலிருந்து வெளியேறிடுவேன்

இயக்குநர் ரோகித் தவான் இயக்கத்தில் கார்த்திக் ஆர்யான் மற்றும் கீர்த்தி சனோன் நடிப்பில் அலா வைகுந்தபுரமுலோ படத்தின் இந்தி ரீமேக் உருவாகி வருகிறது. இந்நிலையில், இந்தி டப்பிங் வெளியானால் தனது படம் ஓடாது என்பதால், அந்த படம் வெளியானால் தான் இனி நடிக்க மாட்டேன் என்றும் பாதியிலேயே படத்தை விட்டு வெளியேறிவிடுவேன் என்றும் அந்த படத்தின் தயாரிப்பாளரை கார்த்திக் ஆர்யான் மிரட்டிய நிலையில் தான் அலா வைகுந்தபுரமுலோ பட தயாரிப்பாளர் இப்படியொரு வார்த்தை கூறி உள்ளார் எனக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X