நாக சைதன்யா நிச்சயதார்த்தத்துக்கு அமலா அக்கினேனி வரலையா?.. புது குண்டை தூக்கிப்போட்ட ரசிகர்கள்!
ஹைதராபாத்: நாக சைதன்யா நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற்ற நிலையில், நிச்சயதார்த்த புகைப்படங்கள் என 2 புகைப்படங்களை மட்டுமே நாகார்ஜுனா தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டார். நாகார்ஜுனா உடன் மட்டுமே நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா இருப்பது போன்ற புகைப்படம் தான் வெளியானது.
இந்நிலையில், நாக சைதன்யாவின் சித்தியான அமலா அக்கினேனி நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லையா? அவரை காணோமே என ரசிகர்கள் கேள்வி எழுப்பி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.

நாகார்ஜுனாவின் மூத்த மனைவியான லக்ஷ்மியின் மகன் தான் நாக சைதன்யா என்பதால் தான் அமலா பங்கேற்கவில்லையா? என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பியுள்ளனர்.
நாகார்ஜுனாவின் 2வது மனைவி: மைதிலி என்னை காதலி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அமலா. மெல்ல திறந்தது கதவு, வேலைக்காரன், வேதம் புதிது, அக்னி நட்சத்திரம், கொடி பறக்குது, சத்யா என பல படங்களில் நடித்து வந்த அமலா தெலுங்கிலும் நாகார்ஜுனா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். 1984ம் ஆண்டு லக்ஷ்மியை திருமணம் செய்துக் கொண்ட நாகார்ஜுனா 1990ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தார். அதன் பின்னர் 2 ஆண்டுகளில் 1992ம் ஆண்டு அமலாவை திருமணம் செய்துக் கொண்டார்.
அமலாவின் மகன்: நாகார்ஜுனாவுக்கும் லக்ஷ்மிக்கும் பிறந்தவர் தான் நாக சைதன்யா. நாகார்ஜுனாவுக்கும் அமலாவுக்கும் பிறந்தவர் அகில் அக்கினேனி. தனது சொந்த மகனின் விசேஷங்களில் முதல் ஆளாக தென்படும் அமலா நாக சைதன்யாவின் நிச்சயதார்த்தத்தில் ஏன் காணவில்லை என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

சமந்தாவுடன் நெருக்கம்: அமலாவுக்கு நடிகை சமந்தா மீது ரொம்பவே பாசம் என்றும் கூறுகின்றனர். சமந்தா நாக சைதன்யாவை திருமணம் செய்து வந்ததில் இருந்தே இருவரும் நெருக்கமாக இருந்து வந்தனர். ஆனால், சமந்தாவை நாக சைதன்யா விவாகரத்து செய்ததில் இருந்து அமலா நாக சைதன்யாவுடன் சரியாக பேசுவது கூட இல்லை என்றும் டோலிவுட்டில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
இன்ஸ்டாவில் கூட வாழ்த்தல: அமலா அக்கினேனி இந்த நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் கூட போடாதது தான் தற்போது இப்படியொரு சந்தேகத்தை கிளப்ப காரணம் என்கின்றனர். அவர் அந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்றாரா? இல்லையா? என்கிற கேள்விகள் தற்போது டோலிவுட்டில் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளன. அவர் கலந்திருக்கவும் வாய்ப்புகள் அதிகம் என்றும் புகைப்படத்தை தான் வெளியிடவில்லை என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











