சபரி மலை ஐயப்பா பாட்டை காப்பியடித்தாரா அனிருத்... எல்லாம் கார்த்திகை மாசம் எஃபெக்டா?

Recommended Video

DARBAR Chumma Kizhi Lyric Video explained | Rajinikanth | A.R. Murugadoss | Anirudh | SPB

சென்னை: தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'சும்மா கிழி' பாடல் நேற்று வெளியாகி வெறும் 14 மணி நேரத்தில் 6.2 மில்லியன் வியூஸ்களை தாண்டி வேற லெவல் டிரெண்டிங்கில் சென்று கொண்டிருக்கிறது.

அதே சமயம் அனிருத் இசையில் வெளியான இந்த 'சும்மா கிழி' பாடல் காப்பி செய்யப்பட்டுள்ளதாகவும் ஒரு குற்றச்சாட்டை நெட்டிசன்கள் இணையத்தில் முன் வைத்து வருகின்றனர்.

அதுவும், சபரிமலை சீசனில் இப்படி ஐயப்பா பாட்டை காப்பியடித்து மாட்டிக்கிட்டீங்களே என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

அண்ணாமலை ட்யூன்

அண்ணாமலை ட்யூன்

தர்பார் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘சும்மா கிழி' நேற்று மாலை 5 மணிக்கு வெளியானது. தர்பார் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீசுக்காக காலையில் இருந்து வெயிட்டிங்கில் காத்திருந்த ரசிகர்கள், அந்த பாட்டு வெளியானதும் அதனை க்ளிக் செய்து கேட்கத் தொடங்கினர். முதலில், அனைவருக்கும் ஒரே அதிர்ச்சி, என்னடா அண்ணாமலை படத்தில் வரும் ‘வந்தேன்டா பாலுக்காரன்' பாடலின் ஆரம்ப ட்யூன் கேட்கிறதே என்று அதன் பின்னர், சூப்பர் ஸ்டார் சும்மா கிழி என ஆரம்பிக்க அடுத்தடுத்த வரிகளை ரசிகர்கள் ஆரம்பிக்கத் தொடங்கி விட்டனர்.

ஐயப்பா பாட்டு

ஸ்ரீஹரி பாடிய கட்டோடு கட்டுமுடி பாடலை அனிருத் காப்பியடித்து தர்பார் ஃபர்ஸ்ட் சிங்கிளை உருவாக்கியுள்ளார் என அந்த பாடலின் வீடியோவை பதிவிட்டு ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். கார்த்திகை மாதம் என்பதால், சபரி மலை சீசனுக்கு அனிருத் பாட்டு போட்டுள்ளார் என்றும் சில ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

அனிருத் உனக்கு மனசாட்சியே இல்லையா

அனிருத் அண்ணா உனக்கு மனசாட்சியே இல்லையா, அவர் என்ன பாவம் செய்ஞ்சாரோ; அதிசயத்த நம்புனா அப்படித் தான் போல என இந்த நெட்டிசனும் ஸ்ரீஹரி பாடிய ஐயப்பா பாடலை போட்டு கலாய்த்து வருகிறார்.

அடப்பாவி அனிருத்

தர்பார் ‘சும்மா கிழி' பாடல் ஐயப்பா பாடல் மட்டுமல்ல எஸ்.பி.பி பாடிய ‘தண்ணி குடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தா தவிக்குது மனசு தவிக்குதுனு' பிரசாந்த் படமான வைகாசி பொறந்தாச்சு படத்தில் வரும் பாட்டின் காப்பி என்றும் சில ரசிகர்கள் வீடியோ போட்டு வெறுப்பேத்தி வருகின்றனர்.

கவுண்டமணி, செந்தில் காமெடி

தர்பார் ‘சும்மா கிழி' பாடல் வைகாசி பொறந்தாச்சு படத்தில் பிரசாந்த் பாடும் "தண்ணி குடம் எடுத்து" பாடலின் காப்பி என்பதை கவுண்டமணி, செந்தில் காமெடியுடன் கலந்து ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த ட்ரோல் மிகவும் வைரலாகி வருகிறது.

ரெக்கார்டு பிரேக்கிங்

என்னதான் ஹேட்டர்ஸ் தர்பார் படத்தின் ‘சும்மா கிழி' பாடல் காப்பி என்று அடம்பிடித்தாலும், ரஜினி ரசிகர்கள் விஜய்யின் பிகில் பாடலான ‘வெறித்தனம்' பாடலை பீட் செய்து சாதனை படைத்து வருகின்றனர். இதற்கு காரணம் விஜய், அஜித் என அனைத்து ரசிகர்களும் ரஜினியின் ரசிகர்களாக இன்றும் இருப்பதால் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X