சுரேஷ் சக்கரவர்த்தி பேசும் போது நடுவிரலை காட்டினாரா அனிதா சம்பத்.. தீயாய் பரவும் போட்டோஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அனிதா சம்பத் மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். சரியான விளம்பரப் பிரியையாக உள்ளர் அனிதா சம்பத்.
செய்தி வாசிப்பது, யூடியூப் சேனல்களில் பேசுவது போல பேசுவது தினமும் ஏதாவது ஒன்றை செய்து கவனத்தை பெற முயற்சித்து வருகிறார்.

ரசிகர்கள் நம்பவில்லை
அதுமட்டுமின்றி அழுது அனுதாபத்தை சம்பாதிப்பது, கேமராவுக்கு முன்பு எதையாவது பேசுவது என தனக்கு தெரிந்த வித்தையையெல்லாம் காட்டி வருகிறார் அனிதா. ஆனால் அவற்றை நம்ப ரசிகர்கள் தயாராகவில்லை.

பிரச்சனையாக்கிய அனிதா
முதல் நாளிலேயே சுரேஷ் சக்கரவர்த்தி சொல்லாத ஒன்றை சொன்னதாக கூறி, அதை அவரிடம் நேருக்கு நேராக கேட்காமல் மற்ற ஹவுஸ்மேட்ஸ்களிடம் பேசி பெரிதாக்கினார். அவர் கிண்டலாக சொன்னதை மறுநாள் காலையில் பேசி பிரச்சனையாக்கினார்.

கெட்ட பெயர் - கண்ணீர்
சுரேஷ் எவ்ளோவோ எடுத்து சொல்லியும் குறும்படம் வேண்டும் என்றார். பின்னர் உண்மையை உணர்ந்தவர் தான் சேர்த்த ஒரு வார்த்தையால் தனக்கு கெட்டப் பெயர் வரப்போகிறது என கேமரா முன்பு கண்ணீர்விட்டார்.

வம்பிழுக்கும் அனிதா
தொடர்ந்து நேற்றைய எபிசோடிலும் சுரேஷ் சக்கரவர்த்தியை சீண்டினார். அவர் பேசாதே என்று சொல்லியபோதும் வேண்டும் என்றே பேசி வம்பிழுத்தார். போதா குறைக்கு சனம் ஷெட்டியையும் பேசக்கூடாது என்று கூறி சுரேஷை நக்கலடித்தார்.

தேவையில்லாதது
அவரின் வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் தனக்கு சமமாக அவருடன் மல்லுக்கு நின்று வருகிறார் அனிதா. நிகழ்ச்சியை முழுவதும் பார்க்கும் போது அனிதா செய்வது தேவையில்லாதது என்று அப்பட்டமாக தெரிகிறது.

ஒதுங்கும் சுரேஷ்
எல்லாவற்றையும் இவரே செய்துவிட்டு என் பெயரை சுரேஷ் கெடுக்கப் பார்க்கிறார் என அழுது சீன் போட்டு வருகிறார். நேற்றைய எபிசோடில் அனிதாவிடம் இருந்து விலக நினைத்த சுரேஷ் என்னிடம் பேசாதேம்மா, ஒரு முறை பட்டதே போதும் என ஒதுங்கினார்.

வெறுப்பேற்றினார்
ஆனால் அப்போதும் விடாத அனிதா சம்பத். அவரைப் பற்றி மற்றவர்களிடம் பேசினார். அதற்கு என்னைப் பற்றி பேசாதே என சுரேஷ் கூறினார். ஆனால் அனிதாவோ நான் உங்களிடம் பேசவில்லை மேடம்கிட்டதான் பேசுகிறேன் என்று திருப்பி திருப்பி சொல்லி வெறுப்பேற்றினார்.

எரிச்சலாக உள்ளது
அனிதா சம்பத் சுரேஷ் சக்கரவர்த்தியிடம் நடந்து கொள்ளும் விதம் பார்க்கவே எரிச்சலாக உள்ளது. தேவையில்லாமல் வயதானவரை சீண்டி தன்மீதான மரியாதையை ஒவ்வொரு நாளும் குறைத்துக் கொண்டு வருகிறார் அனிதா சம்பத்.

அனுபவங்கள்
இந்நிலையில் இன்று புதிதாய் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் அனிதா சம்பத். அதாவது பிக்பாஸ் வீட்டில் தற்போது போட்டியாளர்கள் தங்களின் கடந்த கால அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற டாஸ்க் நடைபெற்று கொண்டிருக்கிறது.

சுரேஷ் பேசுகிறார்
இதில் ஒவ்வொரு போட்டியாளரும் தங்களின் கடந்த கால வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இன்று நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்வது புரமோவில் தெரியவந்துள்ளது.

நடு விரலை காட்டி
அப்போது அவரை முறைத்தப்படியே இருக்கும் அனிதா சம்பத், ஏதோ செய்வது போன்று சுரேஷ் சக்கரவர்த்தியிடம் நடுவிரலை காட்டுவதாக தெரிகிறது. இதை அப்படியே பிடித்த நெட்டிசன்கள் அதன் ஸ்க்ரீன் ஷாட்டை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

இதைத்தான் பண்ணின
அனிதா சம்பத் முறைத்தப்படியே நடுவிரலை நீட்டியிருப்பதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்துள்ள இந்த நெட்டிசன், அனிதா சம்பத் அறந்தாங்கி நிஷாவிடம் நான் என்னக்கா பண்ணேன் என்று கேட்டதை குறிப்பிட்டு, நீ இதைத்தான் பண்ணின என்று அந்த போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

புரமோக்கு அலையாதே
மற்றொரு நெட்டிசனான இவரும் அனிதா நடுவிரலை காட்டும் போட்டோவை ஷேர் செய்து நாக்கை பிடுங்குவது போல் கேட்டிருக்கிறார். அதாவது, உன்ன பத்தி பேசினா மட்டும்தான் புரமோல வரணும்னு இருக்கா? நீ அவரை கிண்டல் பண்ணலாம் அதே மாதிரி உன்னை யாராவது பண்ணிட்டா சீன் போடுவியா? உனக்குலாம் அவ்ளோ சீன் இல்ல.. டிராமா குயின் புரமோக்கு அலையாதே என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











