twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நயன்தாராவின் கல்யாண புடவையில் இதை யாராச்சும் பாத்தீங்களா?

    |

    சென்னை : நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் முடிந்து விட்டது. ஆனால் திருமணத்தன்று நயன்தாரா அணிந்து வந்த உடை, நகை பற்றிய தகவல்களை பலரும் இணையத்தில் தேடி தேடி படித்து, ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

    ஜுன் 9 ம் தேதி நயன்தாரா, விக்னேஷ் சிவனின் திருமணம் மாமல்லபுரத்தில் நடைபெற்றது. மிக பிரம்மாண்டமாக பல பாதுகாப்புகள், கட்டுப்பாடுகளுடன் இவர்களின் திருமணம் நடைபெற்றது. இதில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் பல விஷயங்கள் நடந்துள்ளன.

    நயன்தாராவின் திருமணம் பற்றிய தகவல்களை அதிகம் தேடி ரசிகர்கள், திருமணம் முடிந்ததும் அவர் அணிந்து வந்த புடவை, நகை, நயன்தாரா - விக்னேஷ் சிவன் இடையேயான வயது வித்தியாசம், இவர்கள் திருமணத்திற்காக செய்யப்பட்ட மொத்த செலவு ஆகிய தலைப்புக்களை தான் இணையத்தில் அதிகம் தேடி உள்ளனர்.

    கைதி 2 படத்துல கார்த்தி யாரு தெரியுமா? இயக்குநர் லோகேஷ் கனகராஜே ஸ்பாய்லர சொல்லிட்டாரே!கைதி 2 படத்துல கார்த்தி யாரு தெரியுமா? இயக்குநர் லோகேஷ் கனகராஜே ஸ்பாய்லர சொல்லிட்டாரே!

    நயன்தாரா புடவையில் அப்படி என்ன ஸ்பெஷல்

    நயன்தாரா புடவையில் அப்படி என்ன ஸ்பெஷல்

    திருமணத்தன்று நயன்தாரா என்ன கலரில் பட்டுப்புடவை அணிந்து வருவார் என அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கையில், அவர் பட்டுப்புடவை இல்லாமல் ரோஜா இதழ் போன்ற டிசைனால் ஆன சிவப்பு நிற புடவையில் ராணி போல் வந்தார். பார்ப்பதற்கு சிம்பிளாக இருந்தாலும் இந்த புடவை நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்திற்காக ஸ்பெஷலாக டிசைன் செய்யப்பட்டதாம். இந்த புடவையில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கிறது என்று தெரிந்தால் நிச்சயம் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது.

    நயன்தாரா போட்ட கன்டிஷன்

    நயன்தாரா போட்ட கன்டிஷன்

    நயன்தாராவின் திருமண புடவையை டிசைன் செய்தது காஸ்ட்யூம் டிசைனர் மோனிகா ஷா மற்றும் கரிஷ்மா ஸ்வாலி. தன்னுடைய திருமண புடவை பாரம்பரியம் மிக்கதாக இருக்க வேண்டும். தனது திருமண புடவை சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும் என கேட்டதும் நயன்தாரா தானாம். அதே சமயம் மாடர்ன் லுக்கிலும் இருக்க வேண்டும் என நயன்தாரா ஆரம்பத்திலேயே சொல்லி விட்டாராம். இதனால் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் தனது முழு திறமையையும் பயன்படுத்தி மோனிகா இந்த புடவையை உருவாக்கி உள்ளார். இந்த புடவை முழுக்க முழுக்க கை வேலைப்பாடுகளால் உருவாக்கப்பட்டது.

    இதெல்லாம் யாராச்சும் பார்த்தீங்களா

    இதெல்லாம் யாராச்சும் பார்த்தீங்களா

    நயன்தாரா அணிந்து வந்த ப்ளவுசில் அவரின் கைகளைச் சுற்றி லட்சுமி தேவியின் முழு உருவத்தையும் அமைத்திருந்தனர். இது சென்டிமென்ட் டச்சாக இருக்க வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்டதாம். இதே போல் எம்பிராய்டரி போல் அமைக்கப்பட்டிருந்த நயன்தாராவின் புடவையில் நான்காவது அடுக்கில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் பெயரை எம்பிராய்டரி மூலம் உருவாக்கி உள்ளனர். இருவரும் வாழ்க்கையில் ஒன்றிணைவதை கொண்டாடும் விதமாக இப்படி பெயரை பொருத்தி உள்ளனர். இதுவும் நயன்தாராவின் விருப்பப்படி அமைக்கப்பட்டது தானாம்.

    அடேங்கப்பா கேட்கும் போதே தலை சுத்துதே

    அடேங்கப்பா கேட்கும் போதே தலை சுத்துதே

    நயன்தாரா அணிந்து வந்த நகைகள் அனைத்தும் தங்கம், வைரம், வைடூரியம், மரகத கற்களால் செய்யப்பட்டவை. இவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய். நயன்தாரா கையில் அணிந்திருந்த மோதிரம் மட்டும் 5 கோடி. அவர் அணிந்திருந்த மூக்குத்தியின் விலை 20 லட்சமாம். அவர் அணிந்திருந்த நெக்லஸ் எமரால்ட் மற்றும் மரகதங்களால் ஆனவை. இது முழுக்க முழுக்க மரகத கற்களால் ஆன ரஷ்யன் மாடல் என கூறப்படுகிறது. நயன்தாரா அணிந்திருந்த ஏழடுக்கு ஆரம் வைரம், ரோல்கி, கோல்ஸ்கட், மரகத கற்களால் ஆனதாம். நயன்தாரா அணிந்திருந்த கம்மலும் வைரம், வைடூரிய கற்களால் ஆனதாம். நெற்றிசுட்டியும் வைரத்தால் உருவாக்கப்பட்டதாம்.

    English summary
    For the wedding ceremony, the bride Nayanthara picked a Vermillion Red, custom designed by Monice Shah of Jade. Since the start, Nayanthara was clear that she wanted to wear something contemporary yet traditional. Laxmi motifs as bajubandh on the blouse as Goddess Lakshmi represents prosperity and luck.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X