அக்காவை தொடர்ந்து தங்கச்சிக்கும் ஆள் கிடைச்சுடுச்சா?.. அர்ஜுனின் 2வது மகளின் காதலன் இவர் தானா?
சென்னை: நடிகர் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் திருமணம் சமீபத்தில் பிரம்மாண்டமாக திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் சூழ சென்னையில் நடைபெற்றது. இந்நிலையில், அர்ஜுனின் 2வது மகளின் திருமணமும் சீக்கிரமே நடந்து விடும் போல இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவை காதலிக்கத் தொடங்கிய ஐஸ்வர்யா அர்ஜுன் கடந்த ஜூன் மாதம் 10ம் தேதி அர்ஜுனின் கோயிலில் திருமணம் செய்துக் கொண்டார். ஜூன் 14ம் தேதி சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட திருமண வரவேற்பு விழா லீலா பேலஸில் நடைபெற்றது. ஐஸ்வர்யா மற்றும் உமாபதி இருவரும் திருமண வரவேற்பு விழாவில் அசத்தல் நடனத்தையும் ஆடி பிரபலங்களையும் ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தினர்.

ரஜினிகாந்த், மு.க. ஸ்டாலின், அண்ணாமலை, பாரதிராஜா என ஏகப்பட்ட பிரபலங்கள் பங்கேற்றனர். அக்கா ஐஸ்வர்யா திருமணத்தில் அர்ஜுனின் 2வது மகள் அஞ்சனா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்ட நிலையில், அவர் காதலித்து வருகிறாரா? என்கிற கேள்விகளும் கிளம்பியுள்ளன.
ஆக்ஷன் கிங் அர்ஜுன்: கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் அர்ஜுன். கடந்த ஆண்டு விஜய்யுடன் லியோ படத்தில் வில்லனாக நடித்த அர்ஜுன் அடுத்ததாக அஜித்துடன் விடாமுயற்சி படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார். அஜர்பைஜானில் விடாமுயற்சி ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், அஜித் மற்றும் அர்ஜுன் படக்குழுவினருடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் டிரெண்டாகி வருகிறது. நடிகர் அர்ஜுனுக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என இரு மகள்கள் உள்ளனர்.

ஐஸ்வர்யா அர்ஜுன் திருமணம்: கடந்த மாதம் கோலாகலமாக தனது மூத்த மகள் திருமணத்தை அர்ஜுன் நடத்தினார். ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் தமிழ் ரியாலிட்டி ஷோவை அர்ஜுன் தொகுத்து வழங்கிய நிலையில், அதில், போட்டியாளராக பங்கேற்ற உமாபதி ராமையா அர்ஜுன் மகளை காதலிக்கத் தொடங்கிய நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.
பழத்தோலில் பேக்: ஐஸ்வர்யா அர்ஜுன் தமிழ் மற்றும் கன்னடத்தில் சில படங்களில் ஹீரோயினாக நடித்தார். ஆனால், பெரிதாக அவருக்கு சினிமாவில் வெற்றி கிடைக்கவில்லை. இந்நிலையில், திருமணம் செய்துக் கொண்டார். ஐஸ்வர்யாவின் தங்கை அஞ்சனா சினிமாவே வேண்டாம் என பழத்தோலில் பேக் செய்யும் தொழிலை செய்து வருகிறார். இந்நிலையில், அவரும் விரைவில் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக கூறுகின்றனர்.

அஞ்சனாவின் காதலர் இவரா?: இன்ஸ்டாகிராமில் அக்காவை விட ஆக்டிவாக இருப்பவர் அஞ்சனா. கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் அவர், சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அதில், ஒரு போட்டோவில் அழகிய ஆண் நண்பர் ஒருவருடன் அஞ்சனா இருக்கும் போட்டோவை பார்த்த ரசிகர்கள் இவர் தான் அஞ்சனாவின் காதலரா? என்றும் விரைவில் திருமணம் ஆகப்போகிறதா? என்கிற கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஆனால், இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக அஞ்சனா அர்ஜுன் இதுவரை எந்தவொரு பதிவையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அக்காவுக்கு திருமணம் ஆன நிலையில், அடுத்து தங்கையின் ரூட் க்ளியராகவே இருப்பதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











