பொங்கல் ரேஸில் இணையுமா பீஸ்ட்... படக்குழு பிளான் என்ன ?

சென்னை : டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் சமீபத்தில் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டது. கோலிவுட்டின் சமீபத்திய பிளாக்பஸ்டர் படம் இது தான். கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகி உள்ள சிவகார்த்திகேயன் படம்.

லாக்டவுனிற்கு பிறகு மீண்டும் மக்களை தியேட்டர்கள் நோக்கி வரவழைத்துள்ளது டாக்டர் படம். இதனால் இந்த படம் வசூலை குவித்து, சாதனை படைத்து வருகிறது. த்ரில்லிங், காமெடி, ரொமான்ஸ் என அனைத்தும் கலந்த கலவையாக இந்த படம் அமைந்துள்ளது.

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நெல்சன்

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நெல்சன்

டாக்டர் படத்தின் வெற்றியால் நெல்சன் திலீப்குமாரின் அடுத்த படமான விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது. நெல்சன் திலீப்குமார், விஜய், சன் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே லீட் ரோலில் நடித்து வருகிறார். த்ரில்லர் படமான இதில் செல்வராகவன், ஷைன் டாம் சாகோ, யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

80 நாள் ஷுட்டிங் முடிந்தது

80 நாள் ஷுட்டிங் முடிந்தது

மிகப் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் பீஸ்ட் படத்தின் ஷுட்டிங் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த படத்தின் ஷுட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது. இன்னும் ரஷ்யா மற்றும் டெல்லியில் எடுக்கப்பட வேண்டிய சில காட்சிகள் மட்டுமே மீதமுள்ளதாம். பீஸ்ட் படத்தை 120 நாட்களில் எடுத்து முடிக்க படக்குழு திட்டமிட்டதாம். இதில் 80 நாட்கள் ஷுட்டிங் நிறைவடைந்து விட்டதாம்.

டிசம்பரில் ஷுட்டிங் ஓவர்

டிசம்பரில் ஷுட்டிங் ஓவர்

சில முக்கியமான காட்சிகள் அடுத்த 40 நாட்களில் எடுத்து முடிக்கப்பட உள்ளதாம். டிசம்பர் மாத இறுதிக்குள் படத்தின் ஒட்டுமொத்த ஷுட்டிங்கையும் முடிக்க டைரக்டர் நெல்சன் திட்டமிட்டுள்ளாராம். சமீபத்தில் இந்த படத்தில் வரும் மால் சண்டைக்காட்சிகளின் வீடியோ லீக்காக, விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்தது. இந்த காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.

வலிமையுடன் மோதுமா

வலிமையுடன் மோதுமா

பீஸ்ட் படம் 2022 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக முதலில் கூறப்பட்டது. இதனால் அஜித்தின் வலிமை படத்துடன் விஜய்யின் பீஸ்ட் மோத உள்ளதாக தகவல்கள் பரவின. ஆனால் இதுவரை பீஸ்ட் படத்தின் ரிலீஸ் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. வலிமை படமும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளாரே தவிர தேதி இதுவரை குறிப்பிடப்படவில்லை.

எப்போது ரிலீஸ்

எப்போது ரிலீஸ்

லேட்டஸ்ட் தகவலின் படி, 2022 ம் ஆண்டின் கோடை விடுமுறையில் தான் பீஸ்ட் படத்தை ரிலீஸ் செய்யபடக்குழு திட்டமிட்டுள்ளதாம். சன் பிக்சர்ஸ் தற்போது பல டாப் ஹீரோக்களின் படங்களை ஒரே சமயத்தில் தயாரித்து வருகிறது. இந்த படங்கள் பண்டிகை நாட்களை குறிவைத்தே ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு வருகிறது.

சன் பிக்சர்ஸ் திட்டம் என்ன

சன் பிக்சர்ஸ் திட்டம் என்ன

தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த, அதைத் தொடர்ந்து சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் என வரிசையாக படங்களை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது. அதனால் பொங்கலுக்கு பீஸ்ட் படத்திற்கு பதிலாக வேறு ஏதாவது படத்தை ரிலீஸ் செய்யவும், தமிழ் புத்தாண்டிற்கு பீஸ்ட் படத்தை ரிலீஸ் செய்யவும் சன் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X