இந்த ஆண்டாவது திட்டமிட்டபடி நடக்குமா பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி ?

சென்னை : விஜய் டிவியில் 2017 ம் ஆண்டு முதல் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 4 சீசன்கள் நிறைவடைந்துள்ளன. இந்த 4 சீசன்களையும் நடிகர் கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார். வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சியானது ஜூன் மாதம் துவங்கப்பட்டு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் இறுதிப்போட்டி நடத்தப்படும். முதல் 3 சீசன்களும் அப்படி தான் நடத்தப்பட்டன.

ஆனால் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஜூன் மாதத்திற்கு பதிலாக அக்டோபர் 4 ம் தேதி பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி துவங்கப்பட்டது. இதன் இறுதிப் போட்டி இந்த ஆண்டு ஜனவரி மாதம் 17 ம் தேதி நடத்தப்பட்டது. இதில் ஆரி அர்ஜுனன் முதல் பரிசையும், பாலாஜி முருகதாஸ் இரண்டாவது பரிசையும் பெற்றனர். கடந்த முறை கொரோனா பரவல் காரணமாக பார்வையாளர்கள், இணைய வழியில் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

பரபரப்பை கிளப்பிய பட்டியல்

பரபரப்பை கிளப்பிய பட்டியல்

இந்நிலையில் கடந்த ஆண்டைப் போல் இல்லாமல் இந்த ஆண்டு, வழக்கம் போல் ஜுன் மாதத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகள், போட்டியாளர்கள் தேர்வு ஆகியன விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. போட்டியாளர்களின் உத்தேச பட்டியல் என்ற பெயரில் பல பட்டியல்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பின. ஆனால் அந்த பட்டியலில் இடம்பெற்ற பலர் தாங்கள் பிக்பாசில் பங்கேற்கவில்லை என விளக்கம் அளித்தும் விட்டனர்.

கமல் தொகுத்து வழங்குவாரா

கமல் தொகுத்து வழங்குவாரா

போட்டியாளர்கள் பற்றிய பரபரப்பு ஒரு பக்கம் என்றால், இந்த சீசனை கமல் தொகுத்து வழங்குவாரா என்ற சந்தேகம் ஒரு புறம் கிளம்பியது. தமிழக சட்டசபை தேர்தலில் கமலும், அவரது மக்கள் நீதி மய்யம் கட்சியும் போட்டியிட்டன. இதனால் கமல் வெற்றி பெற்று எம்எல்ஏ., ஆகி விட்டாலோ அல்லது அவரது கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றாலோ கமல், தீவிர அரசியலில் இறங்கி விடுவார். இதனால் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை அவருக்கு பதில் நடிகர் சிம்பு தொகுத்து வழங்குவார் என்ற ஒரு தகவலும் பரவியது.

மீண்டும் சினிமா பக்கம் கவனம்

மீண்டும் சினிமா பக்கம் கவனம்

இது போன்ற பல யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கமல் மற்றும் அவரது கட்சி தேர்தலில் தோல்வி அடைந்தன. கட்சிக்குள்ளும் சில பிரச்சனைகள் எழுந்தது. இதனால் கமலின் அடுத்த திட்டம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, 2 மாதங்களுக்கும் மேலாக நடந்து கொண்டிருக்கும் இந்தியன் 2 பட விவகாரத்திற்கு தீர்வு காணும் முயற்சியில் கமல் இறங்கி உள்ளதாக செய்தி வந்தது. இதனால் கமல், இனி சினிமாக்களில் மீண்டும் கவனம் செலுத்துவார் என தெரிகிறது.

கிரீன் சிக்னல் காட்டிய கமல்

கிரீன் சிக்னல் காட்டிய கமல்

இதனால் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியையும் கமலே தொகுத்து வழங்குவது ஏறக்குறைய முடிவாகி விட்டது. எல்லாம் சரியாகி விட்டதால் திட்டமிட்டபடி ஜுனில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்படும் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் கொரோனா தொற்று நாடு முழுவதும் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மே மாத மத்தியில் கொரோனாவின் தாக்கம் மேலும் தீவிரமடையும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் திட்டமிட்டபடி இந்த ஆண்டும் ஜுன் மாதத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை துவங்குவது கேள்விக்குரியாகி உள்ளது.

கொரோனாவால் பிக்பாசுக்கு சிக்கல்

கொரோனாவால் பிக்பாசுக்கு சிக்கல்

அத்துடன் சினிமா துறையை சேர்ந்த பலரும், அவர்களின் குடும்பத்தினர்களும் கொரோனா தொற்றிற்கு ஆளாகி வருகின்றனர். சிலர் உயிரிழந்துள்ளனர். இதனால் பல முன்னணி நட்சத்திரங்கள் படப்பிடிப்பிற்கு வர தயக்கம் காட்டி வருகின்றனர். இதே நிலை தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் ஏற்பட்டுள்ளது. கொரோனா அச்சத்தால் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்ட பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

ஜூனில் துவங்குவது சந்தேகமே

ஜூனில் துவங்குவது சந்தேகமே

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கொரோனா தீவிரமாக பரவி வருவதால் பிக்பாஸ் சீசன் 5, திட்டமிட்டபடி ஜுன் மாதம் துவங்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் மிக மிகக் குறைவு தான். கடந்த ஆண்டைப் போல தாமதமாக நடத்தப்படலாம் என்றே கூறப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக மற்ற மொழிகளில் நடத்தப்பட்டு வந்த பிக்பாஸ் நிகழ்ச்சிகளும் நிறுத்தப்பட்டு வரும் நிலையில், தமிழில் எவ்வாறு புதியதாக நிகழ்ச்சி துவங்கப்படும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X