Don't Miss!
- Finance
ஏறிய வேகத்தில் இறங்க போகிறது சமையல் எண்ணெய் விலை: மத்திய அரசு எடுத்த முடிவு என்ன தெரியுமா?
- News
"நீங்க என்ன நினைத்தாலும் சரி.. அடுத்த 30 ஆண்டுகள் பாஜகவை சுற்றித் தான்!" காரணத்துடன் விளக்கும் பிகே
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் சொத்துக்களை விற்பதில் கவனமாக முடிவெடுக்கவும்...
- Automobiles
சொன்னதை செஞ்சுட்டாங்க... டாடா நிறுவனம் செய்த நல்ல காரியம்... என்னனு தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!
- Sports
வழுக்கி விழுந்த ஹர்திக் பாண்ட்யா.. முதுகில் பலத்த அடியா.. குஜராத் vs ராஜஸ்தான் போட்டி பரபர சம்பவம்!!
- Technology
86-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி அறிமுகம்.! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பெரிய பட்ஜெட்டா இருக்கே... இதையா போனி கபூர் வேணாம்னு சொன்னாரு?
மும்பை : மிகவும் பிரம்மாண்டமான அளவில் அஜித்தின் வலிமை படம் உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா மற்றும் ஓமிக்ரான் பரவலையடுத்து படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது.
இந்நிலையில் மிகப்பெரிய தொகைக்கு வந்த டீலை போனிக் கபூர் நிராகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தெலுங்கு வெர்ஷனில் வெளியாகும் கார்த்தியின் சூப்பர் ஹிட் திரைப்படம்!

வலிமை படம்
நடிகர் அஜித், ஹுமா குரோஷி உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் வலிமை. இந்தப் படத்தின் டீசர், ட்ரெயிலர், பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. அஜித்தின் பல்வேறு போஸ்டர்கள் உள்ளிட்டவையும் வெளியாகின.

தள்ளிப் போன ரிலீஸ்
வரும் பொங்கலையொட்டி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா உள்ளிட்ட காரணங்களால் படத்தின் ரிலீசை தள்ளி வைக்கும் முடிவை அஜித் மற்றும் படக்குழுவினர் எடுத்துள்ளனர். திரையரங்குகளில் 50 சதவிகித பார்வையாளர்களுக்கே அனுமதி என்ற அறிவிப்பும் மக்களின் நலனும் இதற்கு காரணமாக கூறப்பட்டுள்ளது.

ஓடிடி ஆஃபர்
இந்நிலையில் படத்தை ஓடிடியில் வெளியிட வந்த மிகப்பெரிய ஆஃபரை தற்போது போனி கபூர் நிராகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மிகப்பெரிய படங்களை வெளியிட்டு வரும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தற்போது வலிமை படத்தையும் தனது தளத்தில் வெளியிட போனி கபூரிடம் டீல் பேசியதாக தெரிகிறது.

ரூ.350 கோடி டீல்
வலிமை படததை நெட்பிளிக்சில் நேரடியாக ரிலீஸ் செய்ய 350 கோடி ரூபாய்க்கு இந்த டீல் பேசப்பட்டுள்ளது. ஆனால் இதை போனி கபூர் மறுத்துள்ளார். அஜித்தின் படத்தை நேரடியாக திரையரங்குகளில் ரிலீஸ் செய்வதே சிறப்பாக இருக்கும் என்று அவர் இதை மறுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ரசிகர்கள் ஏமாற்றம்
அஜித்தின் படம் இன்னும் சில தினங்களில் ரிலீசாக இருந்த நிலையில், அதன் ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ளது ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. தினந்தோறும் படத்திற்கான கவுண்ட்வுனை அவர்கள் மேற்கொண்டு வந்த நிலையில் படம் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது.

ரசிகர்கள் காத்திருப்பு
மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ள நிலையில், விரைவில் நிலைமை சரியாகி படம் ரிலீசாகும் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காணப்படுகின்றனர். ஏற்கனவே நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் அஜித் ரசிகர்கள் காத்துள்ளது குறிப்பிடத்தக்கது.