Bigg Boss Tamil 7: பிக் பாஸ் வீட்டுக்கு வருவதற்காகவே சர்ச்சையை கிளப்பினாரா கூல் சுரேஷ்?

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இன்று ஆரம்பம் ஆகிறது. பிரபல நடிகைகள் எல்லாம் வருவார்கள் என ஏகப்பட்ட யூக லிஸ்ட்டுகள் வெளியாகின. ஆனால், கடைசியில் பல நடிகைகள் நோ சொல்லிவிட சீரியல் நடிகைகளின் அணிவகுப்பாக இந்த சீசன் பிக் பாஸ் 7 மாறியுள்ளது.

இப்போதைக்கு யார் ஸ்ட்ராங்கான போட்டியாளர், யார் வீக் என்று சட்டென சொல்லி விட முடியாத அளவுக்கு ஒரு லிஸ்ட் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்ததாக சொல்லப்படும் கூல் சுரேஷ் சமீபத்தில் பெரிய சர்ச்சை ஒன்றில் சிக்கி இருந்தார். இந்நிலையில், அந்த சர்ச்சையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைவதற்கான டிராமா தானா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Did Cool Suresh creates controversy drama recently for entering Bigg Boss Tamil 7?

நடிகர் சிம்புவின் சிபாரிசு காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் கூல் சுரேஷ் அடியெடுத்து வைத்திருக்கலாம் என்றும் பிக் பாஸ் ரசிகர்கள் கூல் சுரேஷ் பிக் பாஸ் போட்டியாளராக இடம்பெற்று இருக்கும் தகவலை அறிந்து கமெண்ட் போட்டு வருகின்றனர்.

யார் இந்த கூல் சுரேஷ்: நடிகர் பிரசாந்தின் நடிப்பில் 2001ல் வெளியான சாக்லேட் படத்தில் காலேஜ் ரவுடியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் தான் கூல் சுரேஷ். 2002ல் வெளியான சூர்யாவின் ஸ்ரீ மற்றும் சிம்புவின் காதல் அழிவதில்லை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். சிம்புவுடன் அப்போதிலிருந்தே நல்ல நட்பு ஏற்பட்ட நிலையில், அவரது தீவிர ரசிகனாகவே செயல்பட்டு வருகிறார்.

காக்க காக்க, திருடா திருடி, அலை, எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, தேவதையை கண்டேன், திருப்பாச்சி, ஆழ்வார், தீபாவளி, பச்சைக்கிளி முத்துச்சரம், குசேலன், படிக்காதவன், வாலு, டிடி ரிட்டர்ன்ஸ், இந்த வாரம் வெளியான சந்திரமுகி 2 படம் வரை பல படங்களில் நடித்துள்ளார்.

தியேட்டர்களில் அலப்பறை: சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தை புரமோஷன் செய்ய ஆரம்பித்த கூல் சுரேஷ் பல ஆண்டுகளாக சினிமாவில் இருந்தாலும், பெரிய நடிகராக மாறவே இல்லை. இந்நிலையில், தியேட்டர்களில் FDFS காட்சிகளுக்கு சென்று அலப்பறை செய்து வீடியோ போட்டு டிரெண்டாக ஆரம்பித்தார். ஷங்கர் மகள் அதிதி ஷங்கருக்கு லவ் லெட்டர் கொடுத்து சர்ச்சையிலும் சிக்கினார்.

தொகுப்பாளினியிடம் அத்துமீறி: பெண்களை கொஞ்சமும் மதிக்கத் தெரியாத கூல் சுரேஷ் சமீபத்தில் மன்சூர் அலி கானின் சரக்கு பட இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கிய விஜே ஐஸ்வர்யாவுக்கு ஸ்டேஜில் மாலை போட்டு சர்ச்சையில் சிக்கினார். இவரு அசல் கோலாருக்கே அண்ணனா இருப்பாரு போல பிக் பாஸ் வீட்டுப் பெண்கள் ரொம்பவே உஷாரா இருங்க என ரசிகர்கள் இப்பவே கூல் சுரேஷை வறுத்தெடுக்க ஆரம்பித்து விட்டனர்.

சர்ச்சையே டிராமாவா?: மேலும், சில ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு தேர்வான நிலையில் தான் சமீபத்தில் அப்படியொரு சர்ச்சை டிராமாவை போட்டிருந்தாலும் போட்டிருப்பார் கூல் சுரேஷ் என்றும் சிலர் கமெண்ட் போட்டு வருகின்றனர். போன சீசனில் ஜிபி முத்து போன வேகத்தில் திரும்பி வந்தது போல கூல் சுரேஷ் வர மாட்டார் என்றும் அதிக கன்டென்ட்டுகள் கிடைப்பது உறுதி என்றும் அக்யூஸ்ட்டுகளாக தேடி எடுத்து போட்டியாளர்களாக அனுப்புவதே பிக் பாஸ் டீம் வேலையாக மாறிடுச்சே என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X