twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மும்பையிலிருந்து வந்த "அன்பு" அதட்டல்.. ஆடிப் போன "செழியன்"!

    By Shankar
    |

    Recommended Video

    மும்பையிலிருந்து வந்த 'அன்பு' அதட்டல்.. ஆடிப் போன 'செழியன்'!- வீடியோ

    சென்னை: தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க தயாரிப்பாளர் ஜி.வி. குமார் தொடர்ச்சியாக வித்தியாசமான படங்களை தயாரித்து வரும் இவர் பைனான்சியர் அன்பு செழியனிடம் கடன் வாங்கியிருந்தார்.

    இவர் தயாரித்த படங்கள் தொடர் தோல்வி படங்களாக பாக்ஸ் ஆபீசில் முடங்கியது. இதனால் வாங்கிய கடனுக்கு வட்டியும் கொடுக்க முடியவில்லை. அசல் எப்படி இவரால் நமக்கு கொடுக்க முடியும் என்று எண்ணிய அன்பு செழியன் தன் கறார் முகத்தை காட்டத் தொடங்கினார்.

    Did Delhi party threaten Anbu Chezhiyan?

    இதற்கிடையே மாயமான் என்கிற சைன்ஸ் பிக்சன் படமொன்றை ஞானவேல்ராஜா, அபி அபி ஆகியோருடன் இணைந்து தயாரிக்க தொடங்கினார். ஷாக்கி ஷெராப், சந்தீப் கிருஷ்ணா, லாவண்யா, டேனியல் பாலாஜி, ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை G.V.குமார் இயக்கினார். 1.9.2017 அன்று ரீலீஸ் ஆன மாயமான் திரைக்கு வருவதற்கு முன் சந்தித்த பிரச்சினைகள் ஏராளம். தனது நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட படங்களுக்கு மட்டுமே G.V.குமார் அன்பு செழியன் வசம் கடன் வாங்கியிருந்தார். மூன்று பேர் இணைந்து தயாரித்த மாயமான் படத்துக்கு அன்பு செழியன் கடன் கொடுக்கவில்லை. அதனால் படம் எந்த பிரச்சினையும் இன்றி வெளியாகும் என்ற குமாரின் நம்பிக்கையை அன்பு நமுத்துப்போக செய்தார்.

    படத்தை விநியோக அடிப்படையில் வியாபாரம் செய்து விட்டாலும் விநியோகஸ்தர்கள் தியேட்டர்களை ஒப்பந்தம் செய்ய முடியவில்லை.. அன்பு செழியன் தன் விசுவாசிகள் அங்கம் வகிக்கும் திரைப்பட கூட்டமைப்பு மூலம் தியேட்டர்கள் ஒப்பந்தம் செய்ய முடியாத அளவிற்கு நெருக்கடி கொடுத்தார்

    சினிமா வியாபார நடைமுறைப்படி G.V.குமார் தரப்பில் நியாயம் இருப்பினும் கூட்டமைப்பு அன்பு செழியன் சொல்வதை செய்தது. பொறுத்து பார்த்த G. V.குமார் அரசியல் வாதிகள் உதவியை நாடினார். தனக்கிருந்த அரசியல் தொடர்புகள் மூலம் நேரடியாக பாஜகவிடம் போய் கதறியதாக கூறப்படுகிறது.

    மும்பையில் இருந்து ஒரு தொலைபேசி அன்பு செழியனுக்கு வந்ததாம். கொடுத்த கடனை கேட்பது உங்கள் உரிமை அதனை தவறு என நாங்கள் கூறமாட்டோம். அதற்கு நீங்கள் கடைபிடிக்கும் வழிமுறைகள் நியாயமானதில்லை. இது தொடருமானால் நீங்கள் தொழில் செய்வது இயலாமல் போய்விடும் என்று கூறி துண்டிக்கப்பட்டது தொலைபேசி அழைப்பு. அதிர்ந்து போன அன்பு செழியன் "மாயமான் " படத்துக்கு எந்த இடையூறும் தர வேண்டாம் என தகவல் அனுப்பினார்.

    அந்த "அன்பான" அதட்டலுக்குப் பின் தமிழ் சினிமாவில் படங்களுக்கு பைனான்ஸ் கொடுப்பதை நிறுத்திய அன்பு செழியன் கொடுத்த கடன்களை வசூலிக்கும் நடவடிக்கையில் வேகம் கூட்டினார். அதன் தாக்கம் அசோக்குமார் தற்கொலையில் முடிந்துள்ளது. அசோக்குமார் தற்கொலை சம்பவம் பற்றி கமலஹாசன் எந்த கருத்தும் செல்லாதது ஏன் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை தொடர்ந்து கேட்டு வருவது ஏன் என்பது இப்போது புரியும். மாநில அமைச்சர்களின் அரவணைப்பில் அன்பு செழியன் இருந்தாலும் மத்திய அரசின் கொடுவாள் அவருக்கு மேல் தொங்கி கொண்டிருக்கிறது.

    English summary
    Sources say that Delhi National party threatened financier Anbu Chezhiyan on behalf of a producer.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X