வாத்தி இசை வெளியீட்டு விழாவில் டிரெண்டான பேச்சு.. ரஜினி, விஜய்யை காப்பி அடிக்கிறாரா தனுஷ்?
சென்னை: என்ன திடீரென எல்லா நடிகர்களும் தங்களோட எக்ஸ் பத்தி மேடையில் பேச ஆரம்பிச்சிட்டாங்களே எல்லாருக்கும் சேம் ஸ்க்ரிப்ட் ரைட்டர் தானா என்றே நெட்டிசன்கள் கலாய்க்க ஆரம்பித்து விட்டனர்.
நடிகர் ரஜினிகாந்த் தனது முன்னாள் காதலி பற்றி மேடையில் பேசி ரசிகர்கள் மத்தியில் கைதட்டல்களை அள்ளிய நிலையில், வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் தனது கேர்ள் ஃபிரெண்ட் உடன் குஷ்பு படம் பார்க்க போன கதையை சொல்லி இருந்தார்.
இந்நிலையில், வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் 3 படத்தில் வருவதை போலவே டியூசனில் ஒரு பெண்ணை காதலித்த கதையை சொன்ன நிலையில், ரஜினி, விஜய் மாதிரி தனுஷ் ட்ரை பண்றாரா என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து விளாசி வருகின்றனர்.

இந்த வாரம் வாத்தி
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் கடந்த ஜனவரி 11ம் தேதி விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு என இரு பெரிய படங்கள் வெளியாகின. அதன் பிறகு தமிழ் சினிமாவில் வார வாரம் பல சின்ன திரைப்படங்கள் வெளியாகியும் பெரியளவில் ஹிட் அடிக்கவில்லை. கவினின் டாடா படம் மட்டுமே ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. அந்த வரிசையில் இந்த வாரம் தனுஷின் வாத்தி திரைப்படமும் செல்வராகவனின் பகாசூரன் திரைப்படமும் பிப்ரவரி 17ம் தேதி வெளியாகிறது.

தனுஷ் பேச்சு
வாத்தி படத்தின் ரிலீஸை முன்னிட்டு சமீபத்தில் வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா சாய் ராம் கல்லூரியில் கோலாகலமாக நடைபெற்றது. அதில், நடிகர் தனுஷ் சொன்ன குட்டி ஸ்டோரி தான் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரோல் மெட்டீரியலாக மாறி உள்ளது. தனது முன்னாள் காதலி குறித்தும் படிக்கும் போது ட்யூசனில் தனுஷ் பண்ண அட்டகாசங்களையும் கூறியிருந்தார்.

குட்டி ஸ்டோரி
இப்போதெல்லாம் ஹீரோக்கள் மேடையில் ஏறி மைக்கை பிடித்து விட்டாலே ரஜினிகாந்தை போல குட்டி ஸ்டோரி சொல்ல ஆரம்பித்து விடுகின்றனர். அதில், ஏதாவது புதுக்கதை இருக்கா என்று பார்த்தால், எல்லாருமே தங்களது எக்ஸ் லவ் ஸ்டோரி என ஒரே கதையை பட்டி டிக்கெரிங் பார்த்து சொல்லி வருவதாக தனுஷ் சொன்ன குட்டி ஸ்டோரியை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

எக்ஸ் லவ்வர் பற்றி
பள்ளியில் படிக்கும் போது ஒரு பெண்ணை காதலித்து வந்தேன். அந்த பெண்ணுடன் பேச ட்யூசன் சேர்ந்தேன். ஆனால், நான் சைட் அடித்து வருவதை அந்த ட்யூசன் வாத்தி பார்த்து விட்டார். இனிமேல், ட்யூசன் போனால் நல்லா இருக்காது என ட்யூசன் வெளியே என் பைக்கில் வெயிட் பண்ண ஆரம்பித்தேன். உல்ஃப் சவுண்ட் கொண்ட ஹாரனை அடிக்கடி அடித்து என் ஆளுக்கு சிக்னல் கொடுத்தேன். கொஞ்ச நாளில் அதையும் அந்த ட்யூசன் வாத்தி கண்டுபிடிச்சிட்டாரு.. அதுக்கு அவர் என்ன சொன்னாரு தெரியுமா? இங்க உள்ள இருக்குறவங்க எல்லாரும் படிச்சி செட்டில் ஆகிடுவீங்க, ஆனால், வெளியே ஒருத்தன் ஹாரன் அடிச்சிட்டு இருக்கான் பாருங்க அவன் நடுத்தெருவுல ஆட்டம் தான் போடுவான் என சொல்லி உள்ளார். இன்னைக்கு நான் ஆடாத நடுத்தெருவே தமிழ்நாட்டில் இல்லை என தனுஷ் பேசியிருந்தார்.
3 படக் கதையா
தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதிஹாசனை காதலிக்க ட்யூசன் சென்று தனுஷ் செய்த அட்டகாசங்களையே மாற்றி பேசி உள்ளார் வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் என நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் தனுஷின் பேச்சை பார்த்து விட்டு அப்படியே 3 படத்தோட கதையை சொல்றாரு பாருங்க என கலாய்த்து வருகின்றனர்.
ரஜினியை போலவே
நடிகர் தனுஷும் குட்டி கதை சொல்ல ஆரம்பித்த நிலையில், தனுஷின் உடை, கையசைவுகள் என அனைத்துமே அப்படியே ரஜினியை காப்பி அடிப்பது போலவே உள்ளதாக ரஜினிகாந்த் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் விளாசி வருகின்றனர். ரஜினிகாந்த் சொன்ன எக்ஸ் லவ்வர் ஸ்டோரியை போலவே தனுஷும் வாத்தி இசை வெளியீட்டு விழாவில் பேசி உள்ளார் என ட்ரோல்கள் பறக்கின்றன.

விஜய் பேச்சு
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் தனது கேர்ள் ஃபிரெண்ட் உடன் குஷ்பு படம் பார்க்க போன கதையை சொன்னதையும் ரஜினிகாந்தின் பேச்சை காப்பி அடித்தார் என்றே ட்ரோல்கள் பறந்தன. இந்நிலையில், ரஜினி, விஜய் போலவே தனுஷும் பேச ஆரம்பித்து விட்டாரா என்றும் அடுத்து எந்த ஹீரோ இதே கதையை ஆல்டர் பண்ண பேசப் போகிறார் என்றும் ரசிகர்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











