ஜெயம் ரவி மனைவி முன் தனுசும் த்ரிஷாவும் செஞ்ச காரியம்...வைரலாகும் போட்டோஸ்
சென்னை : ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியுடன் நடிகர் தனுஷ் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுவது போன்ற போட்டோக்கள் சமீப காலமாக இணையத்தில் வைரலாகின. இதனால் பல மீடியாக்களில் தனுஷ், குடிபோதையில் ஜெயம் ரவியின் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது.
Recommended Video
நடிகை த்ரிஷாவும் கவலையுடன் இதை பார்த்துக் கொண்டிருந்ததாக ஒரு போட்டோவும், ஜெயம் ரவியும் டென்ஷனாக தூரத்தில் இருந்து இதை பார்த்துக் கொண்டிருப்பது போன்ற மற்றொரு போட்டோவும் வெளியானது.

உண்மையில் நடந்தது என்ன
ஜெயம் ரவி மற்றும் தனுஷிற்கு நெருக்கமானவர்களிடம் இந்த போட்டோக்கள் பற்றி விசாரித்த போது, ஜெயம் ரவி நடிப்பில் மோகன் ராஜா இயக்கிய தனி ஒருவன் படத்தின் வெற்றியை கொண்டாட 2015 ல் ஜெயம் ரவி, தனுஷ் குடும்பங்கள் கெட் டுகெதர் நடத்திய போது இந்த போட்டோக்கள் எடுக்கப்பட்டது.

ஜாலியாக பேசிய தனுஷ்
தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் கலந்து கொண்டுள்ளார். அப்போது ஜெயம் ரவி மனைவியுடன் ஜாலியாக தனுஷ் பேசிக் கொண்டிருந்துள்ளார். இந்த போட்டோவை, தனுஷ் - ஜெயம் ரவி மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக வதந்தி பரப்பி விட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நல்ல நண்பர்கள்
உண்மையில் அந்த போட்டோவில் தனுஷ் சிரித்த முகத்துடன் இருப்பது போன்று உள்ளது. இது போன்ற வதந்திகள் பரவினாலும் தற்போது வரை தனுஷ் - ஜெயம் ரவி குடும்பங்கள் நல்ல நண்பர்களாகவே இருந்து வருகின்றனர்.

வைரலான மற்றொரு போட்டோ
சமீபத்தில் ஜெயம் ரவியின் மகள் ஆரவ், ஒரு விழாவில் பேசியதை தனுஷ் கைதட்டி ரசித்தது, ஜெயம் ரவி, தனுஷ், அனிருத் ஆகியோர் ஆரவுடன் பேசுவது போன்ற போட்டோக்களும் வைரலாக்கப்பட்டன. பழைய போட்டோக்களை எடுத்து, இது போன்ற வதந்திகள் பரவி வருவது வாடிக்கையாக உள்ளதாக இரு நடிகர்கள் தரப்பிலும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications