Dil Raju: குண்டூர் காரம் படத்துக்காக அடாவடி செய்தாரா தில் ராஜு.. தெறிக்கும் டிரெண்டிங்!

ஹைதராபாத்: கடந்த ஆண்டு வாரிசு படத்தை தயாரித்து வெளியிட்ட தில் ராஜு இந்த ஆண்டு பொங்கலுக்கு மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தை வெளியிடுகிறார். தெலுங்கில் வரும் மகர சங்கராந்திக்கு இரண்டு பெரிய படங்கள் வெளியாகின்றன. ஒன்று ஹனுமன் மற்றொன்று மகேஷ் பாபு நடித்த குண்டூர் காரம். இதில், அதிக தியேட்டர்கள் குண்டூர் காரம் படத்துக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் அனைத்தும் தில் ராஜுவின் மோசடி தான் என பகீர் குற்றச்சாட்டுகள் கிளம்பி #DilRaju ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ஸ்ரீலீலா, மீனாக்‌ஷி சவுத்ரி, பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள குண்டூர் காரம் மாஸ் ஆக்‌ஷன் மசாலா படமாக உருவாகி உள்ளது. கடந்த ஆண்டே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட அந்த படம் பல்வேறு காரணங்களால் படக்குழுவில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக தாமதமாகி தற்போது சங்கராந்திக்கு சரவெடியாய் வெளியாக காத்திருக்கிறது.

Did Dil Raju doing unfair to Hanuman team and favor to Mahesh Babu Guntur Kaaram?

டிரெண்டிங்கில் தில் ராஜு: #DilRaju ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது. பத்திரிகையாளர்களுடன் கோபமாக தில் ராஜு வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் அதில், அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன. தெலுங்கு சினிமா தயாரிப்பாளரான தில் ராஜு ஃபிலிம் சேம்பர் தலைவராகவும் உள்ளார். இந்நிலையில், ஹனுமன் படத்துக்கு குறைவான தியேட்டர்களையும் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்துக்கு அதிகப்படியான தியேட்டர்களையும் தில் ராஜு ஆட்டையைப் போட்டு விட்டார் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மகேஷ் பாபு படத்துக்கு 90 தியேட்டர்கள்?: நிஜாம் பகுதி தான் டோலிவுட் நடிகர்களின் கோட்டையாக உள்ளது. அதில் மொத்தமே 97 தியேட்டர்கள் உள்ள நிலையில், அதில் 90 தியேட்டர்களில் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தை தில் ராஜு வெளியிட உள்ளதாக சர்ச்சை வெடித்துள்ளது. ஹனுமன் படத்துக்கு வெறும் 7 தியேட்டர்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டு இருப்பதாக பஞ்சாயத்து வெடித்துள்ளது.

கடுப்பான தில் ராஜு: ஒவ்வொரு சங்கராந்திக்கும் என்னை தான் போட்டு உருட்டுறீங்க சமீபத்தில் தயாரிப்பாளர்களை அமர வைத்து எல்லாமே பேசிவிட்டோம். என சமீபத்தில் இதற்கு விளக்கமும் தில் ராஜு கொடுத்துள்ளார். சில யூடியூப் சேனல்கள் என் மீது அவதூறு பரப்புகின்றனர் என்றும் கொதித்தெழுந்து பேசியதும் அந்த ஹேஷ்டேக்கில் தீயாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X