Ravi Mohan: மகன்களைக் கூட நினைத்துப் பார்க்கலையா? சொத்து விஷயத்தில் இப்படி செஞ்சுட்டாரே?

சென்னை: நடிகர் ரவி மோகன் தற்போது கதாநாயகன், வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்பது மட்டுமல்லாமல், தயாரிப்பாளர், இயக்குநர் என தமிழ் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸையும் தொடங்கிவிட்டார். அவரது திரை வாழ்க்கை ஒரு புறம் ஏறுமுகமாக இருந்தாலும், அவரது திருமண வாழ்க்கை மற்றும் விவாகரத்து குறித்த தகவல்களும் சர்ச்சைகளும் தான் அதிகம் வந்து கொண்டுள்ளது. இப்படி இருக்கையில் நடிகர் ரவி மோகன் சமீபத்தில் கோவாவில் சொத்து வாங்கிய போது தன்னை திருமணம் ஆகாதவர் என்று குறிப்பிட்டுக் கொண்டது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இவரது இந்த செயல் ரசிகர்களுக்குமே அதிருப்தியை கொடுத்துள்ளது.

நடிகர் ரவி மோகன் கடந்த 2024 ஆம் ஆண்டு தனது மனைவி ஆர்த்தியை விட்டு பிரிவதாக அறிவித்தார். இவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் ரவி மோகன் அவரது தோழி கெனிஷாவுடன் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதால் எழுந்த சர்ச்சைகள், அவற்றை சுட்டிக் காட்டி ஆர்த்தி எழுப்பிய கேள்விகள் பெரும் பேசு பொருளாக மாறியது.

Did He Forget His Family Ravi Mohan Faces Backlash Over Goa Property Unmarried Declaration
Photo Credit:

திருமணம் ஆகாதவர்: அதற்கு கெனிஷா தரப்பில் இருந்தும் பதில்கள் வந்தது. ரவி மோகன் புதிதாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இயக்குநராகவும் அறிமுகம் ஆக உள்ளார். இப்படி இருக்கையில் ரவி மோகன் கோவாவில் வாங்கிய ரூபாய் 42 லட்சம் மதிப்பிலான சொத்துப் பத்திரத்தில் திருமணம் ஆகாதவர் என்று குறிப்பிட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

சர்ச்சை: ரவி மோகன் - ஆர்த்தி ரவி விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, சட்ட ரீதியாக தன்னை திருமணம் ஆகாதவர் என்று ரவி மோகன் குறிப்பிட முடியாது என்பதால், இது பெரும் பேசு பொருளாக மாறியது மட்டுமல்லாமல், ரவி மோகன் இவ்வாறு செய்திருப்பின் அது தவறு என்றும், ஆர்த்தி ரவி உடன் தான் வாழ பிடிக்கவில்லை என்றால் தனது மகன்களை ரவி மோகன் கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லையா என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் சிலர் இது தவறுதலாகக் கூட நடந்திருக்கலாம் என்று ரவி மோகனுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். விவாகரத்து நிலுவையில் இருந்தாலும் ஆர்த்தி ரவி விவாகரத்துக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

Did He Forget His Family Ravi Mohan Faces Backlash Over Goa Property Unmarried Declaration
Photo Credit:

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X