சுதா கொங்கரா இயக்கத்தில் சிம்பு?.. தாமதம் ஆனதால் டாட்டா காட்டியதா தயாரிப்பு நிறுவனம்?

சென்னை: கமல் தயாரிப்பில் நடிகர் சிம்பு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப் போவதாக அறிவித்து இருந்த நிலையில், அந்த படம் இந்த ஆண்டு முழுவதுமே ஆரம்பிக்காமல் தாமதமாகி வருகிறது.

அதே போல இந்தி சூரரைப் போற்று படத்தை இன்னமும் சுதா கொங்கரா வெளியிடாத நிலையில், அடுத்து சூர்யாவுடன் புறநானூறு எனும் சப்டைட்டில் கொண்ட படத்தை ஆரம்பிக்கப் போவதாக அறிவிப்புகள் வெளியாகின.

இந்நிலையில், சுதா கொங்கரா சிம்புவை வைத்து இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட அந்த படத்தை தயாரிப்பு நிறுவனம் டிராப் செய்து விட்டதாக ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Did Hombale films dropped Simbu and Sudha Kongara project?


ரொம்ப லேட்: சுதா கொங்கரா தயாரிப்பில் சிம்பு நடிக்க உள்ள படத்தை கேஜிஎஃப் தயாரிப்பு நிறுவனமான Hombale தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், பல மாதங்களாக அமைதியாக இருந்த அந்த தயாரிப்பு நிறுவனம் தற்போது அந்த படத்தையே டிராப் செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளன.

கமல் தயாரிப்பில்: ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் சிம்பு நடிக்க உள்ள படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆகும் நிலையில், இதுவரை அந்த படம் ஆரம்பிக்காமல் இருப்பது சிம்பு ரசிகர்களை ரொம்பவே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது என்றும் பத்து தல படத்திற்கு பிறகு சிம்பு நடிக்க உள்ள இந்த படத்திற்கான ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தான் ஷூட்டிங் ஆரம்பிக்கும் என்கின்றனர்.

அறிவிப்பு வரல: கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டாவது கமல் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இன்றும் அறிவிப்பு வெளியாகாதது வருத்தத்தை அளித்துள்ளது. சிவகார்த்திகேயன் படத்தை முடித்த கையோடு சிம்பு படத்தை ஆரம்பிப்பார்களா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

சுதா கொங்கரா: சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக் படத்தை முடித்து விட்டு அடுத்ததாக சூர்யாவின் புறநானூறு படத்தை சுதா கொங்கரா இயக்கப் போவது உறுதியாகி உள்ள நிலையில், அந்த படத்தை முடித்து விட்டு வேறு ஒரு பேனரில் சிம்பு படத்தை சுதா கொங்கரா ஆரம்பிப்பாரா? அல்லது அதே தயாரிப்பு நிறுவனத்தில் ஆரம்பிப்பாரா என்பதற்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X