Manobala: காற்றில் கலந்த காமெடியன்கள்.. விவேக்கை போலவே மனோபாலாவுக்கும் இந்தியன் 2 தான் கடைசி படமா?

சென்னை: இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர், சின்னத்திரை இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்ட நல்ல மனிதர் மனோபாலாவின் மறைவு தமிழ் சினிமாவையே உலுக்கி எடுத்துள்ளது.

பிரபல இயக்குநர்களும், முன்னணி நடிகர்களும், அரசியல் தலைவர்களும் மனோபாலா மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

பல படங்களில் நடித்து வந்த மனோபாலா கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திலும் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Did Indian 2 is the last movie for both Vivek and Manobala?

மனோபாலாவை அறிமுகப்படுத்திய கமல்: இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக மனோபாலா சேர காரணமே கமல் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஓவியக் கல்லூரி மாணவரான மனோபாலாவின் திறமையை கண்டு வியந்த கமல்ஹாசன் தனது நண்பர் மனோபாலாவை பாராதிராஜாவிடம் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

ஆனால், சில காரணங்களுக்காக கமல் மற்றும் மனோபாலா இடையே விரிசல் ஏற்பட்டதால் அதிகளவில் கமல் படத்தில் அவர் நடிக்கவில்லை என்றனர். இந்நிலையில், இந்தியன் 2 படத்தில் மனோபாலா நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Did Indian 2 is the last movie for both Vivek and Manobala?

இந்தியன் 2வில் மனோபாலா: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடிகர் மனோபாலாவும் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மனோபாலாவின் போர்ஷன் முழுமையாக முடிந்து விட்டதா? அல்லது டப்பிங் உள்ளிட்ட பணிகள் மீதம் உள்ளதா? என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

Did Indian 2 is the last movie for both Vivek and Manobala?

விவேக்கின் இறுதிப் படம்: சின்னக் கலைவாணர் விவேக் மறைவுக்கு பிறகு அவர் நடித்த பல படங்கள் வெளியாகி உள்ளன. அரண்மனை 3, தி லெஜண்ட் உள்ளிட்ட படங்கள் அவரது மறைவுக்கு பிறகு வெளியாகின.

தி லெஜண்ட் திரைப்படத்தில் விவேக்கின் டப்பிங் காட்சிகள் சில லைவ் வாய்ஸாகவே இடம்பெற்றிருக்கும். ஆனால், ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் விவேக்கின் சில காட்சிகள் சிஜி தொழில்நுட்பத்தை வைத்து எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், மனோபாலாவுக்கும் இதுதான் கடைசி படமா? அவரது போர்ஷனுக்காகவும் சிறப்பு மெனக்கெடல்கள் இருக்குமா? என ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

கமல் இரங்கல்: மனோபாலாவின் மறைவை அறிந்த கமல்ஹாசன் உடனடியாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது மனோபாலா ரசிகர்களை நிம்மதியடைய செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X