தரக்குறைவாக பேசுபவர்களின் வீடு தேடி வருவேன்.. பயில்வான் ரங்கநாதனை எச்சரிக்கிறாரா ஜாக்குவார் தங்கம்?

சென்னை: சினிமாக்காரர்களை தரக்குறைவாக பேசுபவர்களின் வீடு தேடி வருவேன் என பட விழாவில் ஊடகத்தினருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார் ஜாக்குவார் தங்கம்.

சமீப காலமாக பயில்வான் ரங்க நாதன் , ப்ளூ சட்டை மாறன் மீது ஆத்திரத்தில் இருக்கும் சினிமாத்துறையினர் மேடைதோறும் திட்டுகின்றனர், மிரட்டுகின்றனர். இதில் உச்சபட்சமாக பெயரைச் சொல்லாமல் ஊடகத்தினரை ஜாக்குவார் தங்கம் மிரட்டி உள்ளார்.

சினிமாவில் இருந்து கொண்டே சினிமாவை வைத்து சம்பாதித்துக் கொண்டே சினிமாக்காரர்களுக்கு எதிராக இப்படி பேசுபவர்களை இனியும் சும்மா விட மாட்டேன் எனக் கூறியுள்ளார்.

கம்பெனி இசை வெளியீட்டு விழா

கம்பெனி இசை வெளியீட்டு விழா

ஸ்ரீ மகானந்தா சினிமஸ் நிறுவனம் சார்பில் ஆர்.முருகேசன் தயாரித்திருக்கும் படம் 'கம்பெனி'. எஸ்.தங்கராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் பாண்டி, முருகேசன், திரேஷ் குமார், பிரித்வி, வலினா, காயத்ரி, வெங்கடேஷ், ரமா, சஞ்ஜீவ் பாஸ்கரன், சேலம் ஆர்.ஆர். தமிழ்செல்வன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஏ.எஸ்.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜுபின் இசையமைத்துள்ளார். விவேகா பாடல் எழுதியுள்ளார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

பங்கேற்ற பிரபலங்கள்

பங்கேற்ற பிரபலங்கள்

இதில், இயக்குநர் பாரதிராஜா, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, தயாரிப்பாளர் கே.ராஜன், நாக் ஸ்டுடியோ கல்யாணம், கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், சேலம் ஆர்.ஆர் தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள். பாரதிராஜா குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

செல்போனில் படம் பார்க்கும் வசதி

செல்போனில் படம் பார்க்கும் வசதி

சிறிய படங்களுக்கு நல்ல காலம் பொறக்க போகுது. அதற்கான நடவடிக்கையில் நாங்கள் இறங்கியிருக்கிறோம். செல்போனில் படம் பார்க்கும் வசதியை ஏற்பாடு செய்கிறோம். அது செயல்முறைக்கு வந்தால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் என்பதே வராது என நிகழ்ச்சியில் பேசிய ஜாக்குவார் தங்கம் கூறினார்.

தரக்குறைவாக பேசுபவர்களை

தரக்குறைவாக பேசுபவர்களை

அதேபோல், நடிகர், நடிகைகளை சில ஊடகத்தினர் தரக்குறைவாக பேசுகிறார்கள், அவர்களை நான் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் போனை எடுக்கவில்லை. அதனால், அவர்கள் எங்கிருந்தாலும் என்னிடம் பேச வேண்டும், என்று தெரிவித்துக்கொள்கிறேன். இல்லை என்றால் அவர்களின் வீட்டுக்கு நான் வருவேன், என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

சும்மா இருக்க மாட்டேன்

சும்மா இருக்க மாட்டேன்

இனி சினிமாக்காரர்களை தரக்குறைவாக பேசுவதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம். சரியான செய்தியை போடுங்கள் அதை விட்டுவிட்டு, தவறான பொய்யான செய்திகளை போடாதீர்கள், உங்களுக்கும் குடும்பம் இருக்கிறது மறந்துவிடாதீர்கள், என்பதை இங்கு தெரிவித்துக்கொண்டு, கம்பெனி படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்." என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X