LIK Box Office: விக்னேஷ் சிவன் சோலியை முடித்த ஜனநாயகன் லீக்?.. எல்ஐகே 3 நாள் வசூல் இதோ!
சென்னை: நல்லவேளை அஜித் குமார் தப்பித்து விட்டார் என்றே அவரது ரசிகர்கள் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தை பார்த்துவிட்டு ஏகப்பட்ட ட்ரோல்களை பதிவிட்டு வருகின்றனர். நடிகை நயன்தாரா தயாரிப்பில் பெரும் பொருட்செலவில் வெளியான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி குழந்தைகள் கொண்டாடும் வெற்றியாக மாறும் என்று பார்த்தால், அப்படி கூட ஆகவில்லை என்பது தான் படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படமும் இதே ரூட்டில் எடுக்கப்பட்டு மண்ணைக் கவ்வியது தான் மிச்சம் என்கிற ரீதியில் சமீப காலமாக இதுபோன்ற டெக் பேஸ்ட் படங்களை விட தாய் கிழவி போன்ற கிராமத்து படங்கள் மினிமம் கியாரண்டி அடிக்கின்றன.

பிரதீப் ரங்கநாதனை வைத்து 30 கோடிக்கு படம் எடுத்தால் கண்டிப்பாக பெரிய லாபத்தை பார்த்திருக்கலாம் என்றும் ஆனால், பட்ஜெட் அதிகரித்த நிலையில், தான் படத்திற்கு பெரும் பின்னடைவு என்கின்றனர். வெள்ளிக்கிழமை எப்படி வசூல் வந்ததோ அதே நிலைமை தான் ஞாயிற்றுக்கிழமை வரை என்பது தான் வேதனையளிக்கிறது.
சீமான் முதல் மாளவிகா வரை: ஹாப்பி ராஜ் படத்தில் அப்பாஸ் நடித்தும் அந்த படம் பெரிதாக க்ளிக் ஆகவில்லை. அதே போல வாலமீனு என்கிற கதாபாத்திரத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் மாளவிகா கம்பேக் கொடுத்தும் இந்த படமும் பெரிதாக ஒர்க்கவுட் ஆகவில்லை என ரசிகர்கள் கூறுகின்றனர். சீமான், மிஷ்கின், எஸ்.ஜே. சூர்யா, விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் என ஏகப்பட்ட இயக்குநர்கள் பணியாற்றிய நிலையிலும், படத்தில் 2040ல் தமிழ்நாடு எப்படி இருக்கும் என காட்டுவார்கள் என ரொம்பவே எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏற்கனவே டிரைலர், பாடல்களில் வந்தது மட்டுமே தியேட்டரில் மிஞ்சிய நிலையில், தான் பெரிய ஏமாற்றம் என்கின்றனர்.
மூன்று நாள் வசூல்: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி நடிப்பில் வெளியான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் வெள்ளிக்கிழமை ஏப்ரல் 10 வெளியானது. முதல் நாளில் இந்தியளவில் 7.05 கோடி வசூலை படம் ஈட்டியது. சனிக்கிழமை வசூல் சற்றே அதிகரித்து 7.95 கோடி வசூலை ஈட்டியது. ஞாயிற்றுக்கிழமை சற்று குறைந்து 7.70 கோடி வசூலை மட்டுமே ஈட்டியுள்ளதாக சாக்னிக் தெரிவித்துள்ளது. இதுவரை எல்ஐகே திரைப்படம் 22.70 கோடி வசூலை மட்டுமே இந்தியளவில் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. உலகளவில் இந்த படம் அதிகபட்சமாக 30 கோடி வசூலை அடைந்திருக்கும் என்கின்றனர். இந்த வாரம் முழுவதும் படம் ஓடினால் கூட 50 கோடி வசூலை கடப்பதே சிரமம் என்கின்றனர்.
டியூட் தாக்கம்: லவ் டுடே, டிராகன் படங்களை தொடர்ந்து தீபாவளிக்கு வெளியான டியூட் திரைப்படமே ரசிகர்களை கடுப்பாக்கி விட்டது. பிரதீப் ரங்கநாதன் எல்லா படங்களிலும் ஒரே மேனரிசத்துடன் ஒரே மாதிரி நடித்து வருவது ரசிகர்களை கடுப்பாக்கி விட்டது என்கின்றனர். டியூட் திரைப்படமே 100 கோடி வசூல் என்பது தயாரிப்பாளர்கள் கொடுத்த பில்டப் தான் என்றும் அந்த படத்தின் சொதப்பல் தான் தற்போது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தையும் வாட்டி வதைக்கிறது என்கின்றனர்.
ஜனநாயகன் லீக்: துப்பாக்கி திரைப்படம் எப்படி விக்னேஷ் சிவனின் போடா போடி படத்தை காலி செய்ததோ அதேபோலத்தான் ஜனநாயகன் திரைப்படம் லீக் ஆன நிலையில், இந்த வாரம் பல இளைஞர்கள் தியேட்டருக்குச் செல்லாமல் வீட்டிலேயே திருட்டுத்தனமாக லேப்டாப்பிலும் ஸ்மார்ட் போனிலும் படத்தை டவுன்லோடு செய்து பார்த்து விட்டனர் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











