»   »  இனிமேல் இப்படி பண்ணாதீங்க: அஜீத்தை கண்டித்தாரா ஜெயலலிதா?

இனிமேல் இப்படி பண்ணாதீங்க: அஜீத்தை கண்டித்தாரா ஜெயலலிதா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஜெயலலிதா முன்பு ஒரு முறை அஜீத்திடம் சண்டை காட்சிகள், பைக்-கார் ரேஸில் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று வலியுறுத்தியது தற்போது தெரிய வந்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Did Jayalalithaa advise Ajith about risks?

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையை வைத்து பல்வேறு தகவல்கள் கிளம்பி வரும் நிலையில் அஜீத்தை வைத்து ஒரு பழைய செய்தி இப்போது புதிதாக கிளம்பிப் பரவி வருகிறது. அதாவது ஜெயலலிதா முன்பு ஒருமுறை அஜீத்தை விழா ஒன்றில் சந்தித்தபோது கண்டித்ததாக கூறப்படுகிறது.

அதாவது உங்களுக்கு குடும்பம் இருக்கிறது. அதனால் சண்டை காட்சிகள், பைக்-கார் ரேஸில் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று ஜெயலலிதா அஜீத்தை கண்டித்தாராம். அந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

முன்னதாக அஜீத் ரசிகர்கள் ஆர்வக்கோளாறில் முதல்வர் அஜீத்தை மருத்துவமனைக்கு வரவழைத்து தான் திரும்பி வரும் வரை கட்சியை பார்த்துக் கொள்ளுமாறு கூறியதாக கொளுத்திப்போட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A report is doing rounds that CM Jayalalithaa once met Ajith in a function and advised him not to take risks in stunt scenes.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil