ஜாய் கிரிஸில்டாவின் தந்திரம்.. முதல் கணவரை விவாகரத்தே செய்யாமல்..வழக்கில் நடக்கப்போவது என்ன?
சென்னை: கடந்த சில மாதமாக ஜாய் கிரிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரதிதை ஒட்டுமொத்த சோசியல் மீடியாவும் பேசி வருகிறது. மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி திருமணம் செய்திருப்பதாக ஜாய் கிரிஸில்டா வழக்கு தொடர்ந்து இருக்கும் நிலையில், ஜாய் முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து வாங்காமலே மாதம்பட்டியை திருமணம் செய்து கொண்டதாக தற்போது செய்திகள் வெளியாகி வருகிறது.
மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்திவிட்டு கர்ப்பமாக விட்டுவிட்டு சென்றவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதையடுத்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜூடன் இருக்கும் வீடியோவை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். இதை எதிர்த்து மாதம்பட்டி ரங்கராஜ், அவதூறு கருத்துகள் தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக் கோரியும், சமூக வலைதளங்களில் உள்ள வீடியோக்களை உடனடியாக நீக்கக்கோரியும் மாதம்பட்டி ரங்கராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

ஜாய் கிரிஸில்டா: இதையடுத்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காததை அடுத்து, மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்கும்படி மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கு விசாரணைக்கு ஜாய், மாதம்பட்டி ரங்கராஜ் இருவரும் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதைத்தொடர்ந்து இரண்டு வாரத்திற்கு முன், மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்கும்படி மகளிர் ஆணையம் காவல் துறைக்கு பரிந்துரை செய்தது. இதைத்தொடர்ந்து, ஜாய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை திருமணம் செய்து கொண்டதை ஒப்புக்கொண்டதாகவும், குழந்தை தன்னுடையது தான் என ஏற்றுக்கொண்டதாக பதிவிட்டு இருந்தார்.
மாதம்பட்டி ரங்கராஜ் அறிக்கை: இதை திட்டவட்டமாக மறுத்த மாதம்பட்டி ரங்கராஜ், நான் ஜாயை தன்னிச்சையாக திருமணம் செய்து கொண்டதாக ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை, அவர் என்னை மிரட்டித்தான் திருமணம் செய்தார். நான் ஒருபோதும் டிஎன்ஏ பரிசோதனையை மறுத்ததில்லை. மேலும் அந்த குழந்தை என்னுடையது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், அந்தக் குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக் கொள்வேன் என்று கூறியிருந்தார். ஆனால், அதன் பின் ஜாய் அளித்த பேட்டியில், மாதம்பட்டி ரங்கராஜ் ஆணையத்தில் பேசும் போது, ஜாய் கிரிஸில்டாவிற்கு நான் பொறுப்பு, டிஎன்ஏ டெஸ்ட் தேவையில்லை என்றார். ஆனால், இப்போது மாற்றி பேசுகிறார். அதே போல நான், முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வந்தேன், என்னை விவாகரத்து செய்ய சொன்னதே ரங்கராஜ் தான் என்று கூறியிருந்தார்.
விவகாரத்தே வாங்கல: இந்நிலையில், தற்போது இணையத்தில் ஒரு பெரிய தகவல் பேசுபொருளாகி உள்ளது. அதாவது, ஜாய் கிரிஸில்டா முதல் கணவரை விவாகரத்து செய்யாமல் தான் மாதம்பட்டியை இரண்டாவது திருமணம் செய்து இருக்கிறார். ஜாய் மாதம்பட்டி ரங்கதாஜ் திருமணம் செய்து கொண்டதாக சொன்ன தேதியும், ஜாய்க்கு விவாகரத்தான தேதியும் வேறு வேறாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இத்தனை நாள் மாதம்பட்டி தான் மறைத்து ஏமாற்றி விட்டார் என்று ஜாய் கூறிவந்தார். ஆனால், ஜாய் முதல் கணவரிடம் இருந்து முறையாக விவாகரத்து வாங்காமலே எப்படி மாதம்பட்டியை திருமணம் செய்து கொண்டார். எது எப்படி பார்த்தாலும் இந்த திருமணம் செல்லாத திருமணம் தான். ஜாய் மீது ஸ்ருதி புகார் கொடுத்தால், ஜாய் கிரிஸில்டா , மாதம்பட்டி ரங்கராஜ் இருவரும் சிறைக்கு செல்வார்கள். இதனால் தான் ஸ்ருதி இந்த விஷயத்தில் அமைதியாக இருப்பதாக இணையவாசிகள் பேசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











