அமீர்கான் விவாகரத்தை பற்றி சொல்கிறாரா விஷ்ணு விஷாலின் புது மனைவி ஜுவாலா கட்டா? வைரலாகும் ட்வீட்!

சென்னை: பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானின் விவாகரத்து உலகளவில் டிரெண்டாகி வருகிறது.

இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்துவிட்ட நிலையில், அடுத்தது யார் என பாலிவுட் ஹீரோயின் ஒருவருடன் இணைத்தே இந்தியளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர் பாலிவுட் ரசிகர்கள்.

இந்நிலையில், விளையாட்டு வீராங்கனையும் நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவியுமான ஜுவாலா கட்டா பதிவிட்டுள்ள ட்வீட் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

அமீர்கான் விவாகரத்து

அமீர்கான் விவாகரத்து

இந்தியாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்கான நடிகர் அமீர்கான் தனது இரண்டாவது மனைவியான கிரண் ராவை நேற்று பிரிவதாக அறிவித்தார். காதலித்து திருமணம் செய்து கொண்ட இருவரும் இணைந்தே இப்படியொரு விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டது உலகளவில் டிரெண்டானது.

அசிங்கப்படுத்தும் ரசிகர்கள்

அசிங்கப்படுத்தும் ரசிகர்கள்

அமீர்கான் தனது இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்துள்ள நிலையில், பாலிவுட் நடிகை பாத்திமா சனா ஷேக்குடன் அவருக்கு தொடர்பு இருப்பதாலே இந்த விவாகரத்து முடிவுக்கு அமீர்கான் வந்துள்ளதாக ஏகப்பட்ட ட்ரோல்களை போட்டு அமீர்கானை பாலிவுட் ரசிகர்கள் அசிங்கப்படுத்தி வருகின்றனர்.

விஷ்ணு விஷால் மனைவி

விஷ்ணு விஷால் மனைவி

நடிகர் விஷ்ணு விஷாலின் இரண்டாவது மனைவியான விளையாட்டு வீராங்கனை ஜுவாலா கட்டா தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்ட ட்வீட் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அமீர்கான் குறித்த ட்ரோல்களும், மீம்களும் வைரலான நிலையில் தான் ஜுவாலா கட்டா இப்படியொரு ட்வீட் போட்டு இருக்கிறார் என ரசிகர்கள் கெஸ் பண்ணி வருகின்றனர்.

பொய்யா இருந்தாதான் பிடிக்கும்

பொய்யா இருந்தாதான் பிடிக்கும்

இந்த உலகத்தில் பொய்யாக இருந்தாதான் மக்களுக்கு பிடிக்கிறது. உண்மையாக இருப்பவர்களை மக்கள் வெறுக்கத்தான் செய்கின்றனர் எனும் பாப் மார்லேயின் பாப்புலரான வசனத்தை ட்வீட் செய்திருக்கிறார். நடிகர் விஷ்ணு விஷாலை ஜுவாலா கட்டா காதலிக்கத் தொடங்கிய போதும், விஷ்ணு விஷாலை திருமணம் செய்துகொண்ட போதும் ஏகப்பட்ட ரசிகர்கள் இவர்களையும் படு மோசமாக ட்ரோல் செய்திருந்ததை சுட்டிக் காட்டவே இப்படியொரு ட்வீட்டை ஜுவாலா கட்டா பதிவிட்டுள்ளார் எனக் கூறிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X