காந்தாவுக்கு விழுந்த அடி.. பராசக்தி படம் பாக்ஸ் ஆபீஸ் வெற்றி அடையுமா?.. சுதா கொங்கரா மேஜிக்!

சென்னை: தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் வித்தியாசமான முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறார். அதில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய அமரன் திரைப்படம் 300 கோடி பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை கொடுத்து கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் உச்சத்துக்கு சென்றுவிட்டார் சிவகார்த்திகேயன்.

ஆனால், மாவீரன், மதராஸி உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை. இந்நிலையில், சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி திரைப்படம் அடுத்த ஆண்டு பாக்ஸ் ஆபீஸ் மிகப்பெரிய வரவேற்பை பெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Did Kaantha curse affect Sivakarthikeyan s classic style Parasakthi movie
Photo Credit:

கிளாசிக் படமாக சமீபத்தில் வெளியான காந்தா படத்தை ரசிகர்கள் பெரிதாக வரவேற்காத நிலையில் தான் கோலிவுட்டில் இப்படியொரு அச்சம் எழுந்துள்ளது எனக் கூறுகின்றனர்.

காலியான காந்தா: வழக்கமாக ஏன் ஹீரோக்கள் போலீஸ் அல்லது கேங்ஸ்டர் என அதிகம் ஆக்‌ஷன் கதைகளையே தேர்வு செய்கிறார்கள் என்கிற சலிப்பு ஏற்பட்டாலும் அதுபோன்ற படங்களுக்குத்தான் அதிகப்படியான ரசிகர்கள் தியேட்டர்களை நோக்கி படையெடுத்து வந்து படம் பார்க்கின்றனர். காவியமாக சினிமாவை எடுக்கிறேன் என எடுக்கப்பட்ட காந்தா படத்தை பார்க்க ரசிகர்கள் பெரிதாக ஆர்வம் செலுத்தவில்லை. லோகா படத்துக்கு கிடைத்த பாக்ஸ் ஆபீஸ் வெற்றியில் ஒரு சதவீதம் கூட காந்தாவுக்கு கிடைக்கவில்லை என்பது தான் பேரதிர்ச்சி. இதுவரை காந்தா திரைப்படம் வெளியான 3 நாட்களில் வெறும் 13 கோடி ரூபாய் வசூலை மட்டுமே இந்தியளவில் ஈட்டியிருப்பதாகவும் உலகளவில் 18 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக கூறுகின்றனர்.

பழைய படம் பார்க்க ஆர்வமில்லையா?: காந்தா திரைப்படத்தில் துல்கர் சல்மான், சமுத்திரகனி, பாக்யஸ்ரீ போர்ஸ் எல்லாம் உயிரைக் கொடுத்து நடித்தாலும், அந்த படத்தின் 2ம் பாதியில் ராணா டகுபதி வந்து மாஸ் காட்டுகிறேன் என அதுவரை படத்தில் இருந்த உயிர்ப்பை போக்கி விட்டார் என்பதே குற்றச்சாட்டுகளாக இருந்தாலும், ரசிகர்கள் அனைவரும் எக்ஸ்பீரியன்ஸ் செய்யக் கூடிய படமான காந்தாவை தியேட்டருக்குப் போய் பார்க்காமல் தவிர்க்க காரணமே அது பழைய படம் போல இருப்பதால் தான் எனக் கூறுகின்றனர்.

பராசக்தி நிலை என்ன ஆகும்?: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா, ரவி மோகன், அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. அந்த படமும் பீரியட் டிராமா தான். கிளாசிக் படங்களை பார்க்கும் உணர்வைத் தான் கொடுக்கும் என்கிற நிலையில், அந்த படத்தின் பாக்ஸ் ஆபீஸ் ரிசல்ட் என்ன ஆகுமோ என்கிற அச்சத்தை காந்தா படத்தின் தோல்வி கொடுத்துள்ளது என்கின்றனர்.

சுதா கொங்கரா மேஜிக்: ஆனால், கண்டிப்பாக சூரரைப் போற்று படத்தை இயக்கிய சுதா கொங்கராவின் மேஜிக் முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதி என கடைசி வரை கச்சிதமாக இருக்கும் என்றும் அடுத்த ஆண்டு ஆரம்பமே தமிழ் சினிமாவுக்கு நல்ல வெற்றிப் படமாக பராசக்தி படம் அமையும் என்றும் நம்பிக்கையுடன் படக்குழு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ் சினிமா ரசிகர்கள் ஆக்‌ஷன், அதிரடி, மசாலா படங்களை மட்டுமே தியேட்டரில் பார்ப்போம், பராசக்தியை ஓடிடியில் பார்த்துக் கொள்வோம் என நினைத்து விட்டால் கஷ்டம் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X