ராமாயணம், மகாபாரதம் வரிசையில் இணையுமா கல்கி 2898 ஏடி?.. நாக் அஸ்வினின் பிரம்மாண்ட மேக்கிங் எப்படி?

சென்னை: இந்தியாவில் மிகப்பெரிய புராணங்களாக இருப்பது வால்மீகி எழுதிய ராமாயணம் மற்றும் வியாசர் எழுதிய மகாபாரதம் தான். இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையே மகாபாரத போரின் ஒரு அங்கம் தான். இந்த இரண்டு இதிகாசங்களை வைத்து ஏகப்பட்ட படங்கள், ஏகப்பட்ட கிளை கதைகள் பல நூறு வருடங்களாக எழுதப்பட்டும், சொல்லப்பட்டும், காட்சிப்படுத்தப்பட்டும் உள்ளன.

மகாபாரதத்தில் கலியுகம் குறித்தும், கல்கி அவதாரம் வெள்ளை குதிரையில் விஷ்ணு பகவான் வருவார் என்பது குறித்த சிறு குறிப்பு இறுதியில் இருக்கிறது. அதை வைத்துக் கொண்டு இப்படியொரு கதையை டெவலப் செய்துள்ள நாக் அஸ்வினை படைப்பாளிகள் அனைவரும் பாராட்டத்தான் செய்வார்கள்.

Kalki Prabhas

புராணத்தையும் எதிர்கால டெக்னாலஜி உலகத்தையும் மிக்ஸ் செய்து கல்கி கதை 2898ம் வருடத்தில் நடைபெற்றால் எப்படி இருக்கும் என்கிற கற்பனை கதையாகவே இந்த படம் உருவாகி இருக்கிறது. கல்கி படத்தை ஏன் ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக டாப் 5 பாசிட்டிவ் அம்சங்கள் குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..

அஸ்வத்தாமாவாக அமிதாப் பச்சன்: இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் நடிகரான பிக் பி அமிதாப் பச்சனுக்கு பிரம்மாஸ்திரம் படத்தை விட லைஃப் டைம் செட்டில்மெண்ட் ரோலாக அஸ்வத்தாமா கதாபாத்திரம் கல்கி 2898 ஏடி படத்தில் நாக் அஸ்வின் வடிவமைத்துள்ளார். 6 அடி உயரத்துக்கும் மேல் உள்ள அமிதாப் பச்சன் பிரபாஸை அப்படியே எலியை பிடித்து நசுக்குவது போல நசுக்கி தூக்கிப் போடும் காட்சிகள் எல்லாம் ப்யூர் கூஸ்பம்ப்ஸ். எத்தனை வருஷமாச்சு சார் உங்களை இப்படி பார்த்து என்று ரசிகர்கள் விசில் அடிக்க ஆரம்பித்து விடுகின்றனர். அமிதாப் பச்சனின் ரேஞ்சுக்கு அவருக்கு எழுதப்பட்ட ரோலாகவே இது உள்ளது. கல்கி 2898 ஏடி படத்தை பொறுத்தவரையில் பிரபாஸை விட அஸ்வத்தாமாவாக நடித்துள்ள அமிதாப் பச்சன் தான் ரியல் ஹீரோ என்றே சொல்லலாம். அவருக்காகவே தாராளமாக படத்தை பார்க்கலாம்.

பிரம்மாண்ட மேக்கிங்: ஸ்டார் வார்ஸ், டூன் படங்களில் 1000 கோடிக்கு அதிகமான பட்ஜெட்டில் உருவாக்கப்படும் விஷயங்களை 600 கோடிகளில் எடுக்கப்பட்ட படத்தில் காட்சிப்படுத்தியிருப்பது வேறலெவல். சொர்க்கபுரி போல இருக்கும் காப்ளக்ஸ் இடத்தை காட்டுவதும், பல வருடங்களாக உயிர் வாழ கர்ப்பிணிகளின் உயிர் சக்தியை எடுத்துக் கொள்ளும் கமல்ஹாசனை காட்டுவதும் அடிபொலியாக உள்ளது. மேட் மேக்ஸ் ஃபியூரி படத்தில் வருவது போலவே தண்ணி இல்லாத பஞ்சம், புழுதி மணலில் சேஸிங் சண்டைக் காட்சிகள், அன்னா பென் பறக்கும் பைக்கில் சென்று சண்டைப் போடும் காட்சிகள், குறிப்பாக குருக்‌ஷேத்ர போரை காட்டும் இடங்களின் பிரம்மாண்டத்தை காட்டும் போது மகாபாரத படத்தை ராஜமெளலி எடுத்தால் இப்படித்தான் எடுக்க வேண்டும் என எண்ணத் தூண்டும் அளவுக்கு பிரம்மாண்டம் இந்த கல்கி படத்தில் உள்ளது.

பிரபாஸ்: அமிதாப் பச்சனை தாண்டி அடுத்த படியாக இந்த படத்தில் ரசிகர்களை கவர்வது ஹீரோ பிரபாஸ் தான். முதல் பாதியில் அவரை வில்லனாகவே காட்டியுள்ள நிலையில், அடுத்த பாகத்தில் தான் பிரபாஸ் ஹீரோவாக கல்கியை காப்பாற்ற போகிறார் என்பது கிளைமேக்ஸ் காட்சியில் ரிவீலாகும் அந்த இடத்துக்கே படம் நின்னு பேசும்.

தீபிகா படுகோன்: கல்கியை கருவில் சுமக்கும் சுமதியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். அவரது ரியாக்‌ஷன்கள் மற்றும் ஒரு சில வசனங்கள் என்றால் ஒவ்வொன்றுமே படத்துக்கு உயிராக அமைந்திருக்கிறது. கிருஷ்ணரை கடலில் வசுதேவர் கொண்டு செல்லும் போது கடல் வழிவிடுவது போல வரும் ஒரு காட்சி ரியல் கூஸ்பம்ப்ஸ் கொடுக்கும்.

ராமாயணம், மகாபாரதம் வரிசையில் வருமா?: இத்தனை பிரம்மாண்ட மேக்கிங் மற்றும் கதை சொல்லும் படத்தை தியேட்டரில் தான் பார்த்தாக வேண்டும். ஓடிடியில் பொறுமையாக பார்த்தால் நிச்சயம் இந்த தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்காது. பாகுபலி படத்தை விட பிரம்மாண்ட படமாகவே கல்கி 2898 ஏடி படத்தை நாக் அஸ்வின் உருவாக்கி உள்ளார். ராமாயணம், மகாபாரதம் வரிசையில் இந்த படம் இதிகாசமாக அமையுமா? என்றா அது கேள்விக்குறி தான். அடுத்தடுத்த பாகத்தில் நாக் அஸ்வின் எப்படியான கதையை சொல்கிறார். அது அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கிறதா? என்பதை பொறுத்துதான் அந்த விஷயம் இருக்கிறது. ஆனால், நிச்சயம் பாகுபலி பட வரிசையில் இந்த படம் வரும்.

More from Filmibeat

Read more about: kalki prabhas கல்கி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X