சிம்பு, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், எச். வினோத்.. இத்தனை பேரோட டைமை வேஸ்ட் பண்ணாரா கமல்ஹாசன்?
சென்னை: கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். சிவகார்த்திகேயனின் அமரன் படம் ரிலீஸுக்கு தயாரான நிலையில், தேர்தலுக்காக அந்த படத்தின் ரிலீஸ் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. சிம்புவை வைத்து பிரம்மாண்ட படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ள கமல்ஹாசன் இன்னமும் அந்த படத்தின் ஷூட்டிங்கை ஆரம்பிக்கவில்லை என அதிர்ச்சியை கிளப்பி உள்ளனர்.

திடீரென நடிகர் கமல்ஹாசன் மீது இப்படியொரு குற்றச்சாட்டு சினிமா உலகில் எழ காரணமே அதிரடியாக ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் தக் லைஃப் படத்தில் இருந்து விலகியது தான் காரணம் என்கின்றனர்.

எச். வினோத் ஏமாற்றம்: துணிவு படத்திற்கு பிறகு இயக்குநர் எச். வினோத் ஒரு வருடமாக கமல்ஹாசன் படத்தை இயக்குவதற்காக காத்திருந்து கடைசியாக அந்த படம் என்ன ஆனது என்றே தெரியாத நிலையில், அடுத்து யாரை வைத்து இயக்குவது என்று தெரியாமல் திண்டாடி வருவதாக கூறுகின்றனர். தளபதி 69 படத்தை இயக்கப் போவது எச். வினோத்தா? அல்லது அட்லீயா? என்கிற விவாதம் கடைசியாக நடைபெற்று வருகிறது. கமல்ஹாசன் எச். வினோத்துடன் படத்தை அறிவித்து விட்டு அதிலிருந்து விலகி மணிரத்னத்தின் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார்.

ஜெயம் ரவி, துல்கர் சல்மான் விலகல்: ஆனால், அரசியலுக்காக தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பையும் கமல்ஹாசன் தற்காலிகமாக நிறுத்தி விட்டார் என்றும் கால்ஷீட் எல்லாம் மாற்றப்பட்ட நிலையில், படத்தில் இருந்து முன்னதாக துல்கர் சல்மான் விலகினார் என்றும் ஜெயம் ரவி கைவசம் அரை டஜன் படங்கள் உள்ள நிலையில், தக் லைஃப் படத்திற்கு கொடுத்த கால்ஷீட்டுகளை வேறு தேதிக்கு மாற்ற முடியாத நிலையில், தற்போது அவரும் விலகி விட்டதாக கூறுகின்றனர்.

வீணடிக்கிறாரா கமல்ஹாசன்: ஒரு பக்கம் அரசியல், ஒரு பக்கம் பிக் பாஸ், ஒரு பக்கம் சினிமா என ஓடிக் கொண்டிருக்கும் கமல்ஹாசன் திமுகவில் இணைந்ததும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்த பலர் விலகினர். அரசியலுக்காக சினிமாவில் அதிக கவனத்தை செலுத்த முடியாத சூழலில் இயக்குநர்கள் மற்றும் ஹீரோக்களின் நேரங்களை வீணடித்து வருகிறார் கமல்ஹாசன் என்கிற குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. எஸ்டிஆர் 48 படம் அறிவிக்கப்பட்டு ஒரு வருஷம் ஆகிவிட்ட நிலையில், எப்போது அந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. சிம்பு, தேசிங் பெரியசாமி இருவருமே பல மாதங்கள் கமலுக்காக காத்திருப்பதாக கூறுகின்றனர். தக் லைஃப் படத்தில் இருந்து ஒரு ஒரு நடிகராக விலகி வரும் நிலையில், மணிரத்னம் அப்செட் ஆகி விட்டாராம்.


Click it and Unblock the Notifications











