மிரட்டினாரா கமல்?

By Staff
Click here for more images
தசாவதாரம் கதை விவகாரம் தொடர்பாக தன்னை கொலை செய்து விடுவதாக நடிகர் கமல்ஹாசன் மிரட்டியதாக உதவி இயக்குநர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தசாவதாரம் படத்தின் கதை தொடர்பாக ஆரம்பத்திலிருந்தே பிரச்சினை நிலவி வருகிறது. சென்னை மேற்கு தாம்பரத்தை சேர்ந்த உதவி இயக்குநரான செந்தில்குமார் என்பவர், இந்தக் கதைக்கு சொந்தம் கொண்டாடி வழக்கு தொடர்ந்தார்.

முதலில் இந்த வழக்கு கீழ் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் உயர்நீதிமன்றத்தை அணுகினார் செந்தில்குமார். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார். இதையடுத்து அப்பீல் செய்தார் செந்தில்குமார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா தலைமையிலான பெஞ்ச் விசாரித்து கதை கமல்ஹாசனுக்கு சொந்தமானதுதான் என்று கூறி செந்தில்குமாரின் மனுவைத் தள்ளுபடி செய்தது.

இந் நிலையில், தாம்பரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 6ம் தேதி ஒரு செந்தில்குமார் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

அதில், 'அர்த்தநாரி என்ற குளோனிங்' என்ற டைட்டிலில் ஒரு கதையை நடிகர் கமலிடம் சொன்னேன். கதை வித்தியாசமாக இருப்பதாக கூறிய கமல்ஹாசன், அவரது மேலாளர் முரளி ஆகியோர் என்னை அழைத்தனர்.

நான் எனது நண்பர் பாலாவுடன் சென்றேன். அங்கு கமல், மேலாளர் முரளி, கார்த்திக் ஆகியோரிடம் மீண்டும் அந்த கதையை கூறினேன்.

கதை நன்றாக இருப்பதாக கூறி ரூ. 501 அட்வான்ஸ் கொடுத்தனர். மேலும் இந்த கதைக்கு ரூ.25 லட்சம் தருவதாகவும், படத்தில் இணை இயக்குனராக பணிபுரிய வாய்ப்பு தருவதாகவும் தெரிவித்தனர்.

ஆனால் நான் கதை சொன்ன சில தினங்களிலேயே கமல்ஹாசன் 10 வேடங்களில் நடிக்கப் போவதாக, பத்திரிக்கைகளில் விளம்பரம் வந்தது. அவர்களிடம் விளக்கம் கேட்டபோது, என்னை தகாத வார்த்தைகளால் திட்டி அனுப்பினர்.

இதையடுத்து, படத்துக்கு தடை விதிக்கக் கோரி, உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்தேன்.

இதையடுத்து என் வீட்டுக்கு கமல்ஹாசனின் மேலாளர்களான முரளி, கார்த்திக் உட்பட 10 பேர் வந்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய் வழக்கை திரும்ப பெறவேண்டும் என்று மிரட்டினர்.

என் கதையை வாங்கி ஏமாற்றியதுடன் எனக்கும், குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி முருகேசன், இந்த மனு தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

செந்தில்குமார் இயக்குனர் கைது:

இந்நிலையில் உதவி இயக்குனர் செந்தில்குமார் தனக்கு நீதி வழங்க வேண்டும் என்று கூறி நடிகர் சங்கம் முன்பு உண்ணாவிரதம் இருக்க போலீசாரிடம் அனுமதி கேட்டார். ஆனால் அவர்கள் அனுமதி தரவில்லை.

ஆனால் செந்தில்குமார் தடையை மீறி இன்று நடிகர் சங்கம் முன்பாக தனக்கு நீதி வழங்க வேண்டும் என்று கோரி உண்ணாவிரதம் இருந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தேனாம்பேட்டை போலீசார் விரைந்து வந்து தடையை மீறி உண்ணாவிரதம் இருந்த செந்தில்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: kamal
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X