»   »  நாயை சுட்டுக் கொன்றதாக கனல் கண்ணன் மீது புகார்

நாயை சுட்டுக் கொன்றதாக கனல் கண்ணன் மீது புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன், தனது வீட்டுக்குப் பக்கம் திரிந்த நாயை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக நாயின் உடலைக் கைப்பற்றிய போலீஸார் அதை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தமிழ்த் திரையுலகின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன். இவரது வீடு மதுரவாயல் கிருஷ்ணா நகரில் உள்ளது. இவரது வீட்டுக்கு எதிர் வீட்டில் வசிப்பவர் பிரியதர்ஷினி. 21 வயதாகும் இவர் தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணியாற்றி வருகிறார்.

மதுரவாயல் காவல் நிலையத்தில் பிரியதர்ஷினி ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், நான் தெருவில் திரியும் ஒரு நாயை வளர்த்து வந்தேன். இந்த நாய் மட்டுமல்லாது தெருவில் திரியும் பல நாய்களுக்கும் நான் சாப்பாடு போட்டு வருகிறேன்.

அதில் ஒரு பெண் நாயை, ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் தனது துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டார். இதை எனது தாயார் நேரில் பார்த்துள்ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார்.

இதேபோல பிராணிகள் துயர் துடைப்புக் கழக தலைவர் ராஜமாணிக்கத்திற்கும் அவர் புகார் மனு அனுப்பினார். இதையடுத்து போலீஸாரும், பிராணிகள் துயர் துடைப்புக் கழக நிர்வாகிகளும் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணை நடந்தபோது கனல் கண்ணன் குடும்பத்தினருக்கும், பிரியதர்ஷினி குடும்பத்தினருக்கும் இடையே கடும் வாய்ச் சண்டை மூண்டது. போலீஸாரும் அந்தத் தெருவில் வசிப்பவர்களும் புகுந்து இரு தரப்பினரையும் விலக்கி விட்டனர்.

போலீஸார் சர்ச்சைக்குரிய நாயின் உடலைக் கைப்பற்றி வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேதப் பரிசோதனையில்தான் நாய் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து இறந்ததா அல்லது வேறு வழியில் இறந்ததா என்பது தெரிய வரும்.

இதற்கிடையே, தான் நாயை துப்பாக்கியால் சுட்டுக் ெகான்றதாக கூறப்படும் புகார் கண்ணன் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், என்னிடம் துப்பாக்கியே கிடையாது. அப்படி இருக்கையில் நான் எப்படி நாயை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருக்க முடியும். மேலும் சம்பவம் நடந்தபோது நான் சென்னையில் இல்லை என்றார்.

இந்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் நாய்க்குச் சொந்தக்காரர் என்று கூறி சிவா என்பவர் போலீஸாரை அணுகியுள்ளார்.

இந்த நாய்ப் பிரச்சினை குறித்து மதுரவாயல் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

கமிஷனர் அலுவலகத்தில் புகார்:

இதற்கிடையே பிரியதர்ஷினி இன்று தனது தாயார் விஜயலட்சுமி, தோழி அனிதா ஆகியோருடன் மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு ஒரு புகார் கொடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நான் கனல் கண்ணன் மீது புகார் கொடுத்தும் கூட அதன் மீது போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் நான் புகார் கொடுத்ததால் ஆத்திரமடைந்த கனல் கண்ணன் எனது வீட்டுக்குள் புகுந்து எனது சகோதரர் ஜோசப்பை அடித்துள்ளார்.

எங்களது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. பயமாக இருக்கிறது. போலீஸார் எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளோம். கனல் கண்ணன் நாயை சுட்டது உண்மைதான். ஆனால் போலீஸார் இதை மறைக்கப் பார்க்கிறார்கள். ஆனால் இதை நான் விடப் போவதில்லை என்றார்.

நாய்க்குப் பிரேதப் பரிசோதனை:

இதற்கிடையே சர்ச்சைக்குரிய நாயின் உடலில் இன்று வேப்பேரி கால்நடை மருத்துவமனயில் இன்று பிரேதப் பரிசோதனை நடந்தது.

Read more about: kanal
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil