ஒரு ஹிட் கொடுத்தவுடனே ஓட மாட்டேன்.. பிரசாந்த் நீல், ராஷ்மிகாவை தாக்கினாரா ரிஷப் ஷெட்டி?
கோவா: சர்வதேச இந்திய திரைப்பட விழா கோவாவில் நடைபெற்று வருகிறது. அதில், கலந்து கொண்டு பேசிய கன்னட இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி ஒரு படம் ஹிட் கொடுத்த உடன் கன்னட திரையுலகை மறந்து விட்டு மற்ற இடத்துக்கு ஓட மாட்டேன் என பேசியுள்ளார்.
சினிமா உலகில் திடீரென சந்தோஷத்துக்கும் என்டர்டெயின்மென்ட்டுக்கும் பஞ்சம் வந்து சண்டைக் காடாக மாறியுள்ளது. சாண்டல்வுட் என சந்தனக் காடாக இருந்த கன்னட திரையுலகத்திலும் தற்போது சர்ச்சை புயல் கிளம்பி உள்ளது.

காந்தாரா படத்தின் நாயகன் ரிஷப் ஷெட்டி மறைமுகமாக இயக்குநர் பிரசாந்த் நீல் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனாவை தான் தாக்கிப் பேசியுள்ளார் என சினிமா வட்டாரத்தில் புதிய பூகம்பம் ஒன்று வெடித்துள்ளது.
காந்தாரா 2 ஆரம்பம்: ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாகவும் பாக்ஸ் ஆபிஸ் பிளாக்பஸ்டர் படமாகவும் மாறிய நிலையில், அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க அனைத்து வேலைகளையும் ரிஷப் ஷெட்டி ஆரம்பித்து சமீபத்தில் காந்தாரா 2 படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டரை வெளியிட்டு இருந்தார்.
கோவாவில் ரிஷப் ஷெட்டி பேச்சு: IIFA 2023 எனும் சர்வதேச இந்திய திரைப்பட விழா கோவாவில் நடைபெற்று வரும் நிலையில், அதில் கலந்து கொண்டு பேசிய ரிஷப் ஷெட்டி மற்றவர்களை போல ஒரு ஹிட் கொடுத்து விட்டு கன்னட சினிமாவை விட்டு ஓட மாட்டேன் என்றும் தொடர்ந்து அதன் வளர்ச்சிக்காக பாடுபடப் போகிறேன் என்றும் பேசியுள்ளார்.
ராஷ்மிகாவுக்கு எதிராக: ரிஷப் ஷெட்டி தனது நண்பர் ரக்ஷித் ஷெட்டிக்கு ஆதரவு தெரிவித்தும் ராஷ்மிகாவுக்கு எதிராகவும் இந்த கருத்தை வெளிப்படுத்தி உள்ளாரா? என்கிற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி உள்ளனர். பெங்களூரில் பிறந்து வளர்ந்து கன்னட சினிமாவான கிரிக் பார்ட்டி படத்தில் அறிமுகமான ராஷ்மிகா அதன் பின்னர் தெலுங்கில் கீத கோவிந்தம், புஷ்பா என ஹிட் கொடுத்து, தமிழில் விஜய்யுடன் வாரிசு, கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்த அவர், தற்போது பாலிவுட்டில் அனிமல் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.
சலார் இயக்குநர்: அதே போல கேஜிஎஃப் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் பிரபாஸின் சலார் படத்துக்காக தெலுங்கு சினிமாவுக்கு நகர்ந்த நிலையில், இருவரையும் மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார் ரிஷப் ஷெட்டி என புதிய பிரச்சனை வெடித்துள்ளது.


Click it and Unblock the Notifications











