என்னது...பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிரையும் மாத்துறீங்களா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

விஜய் டிவியில் அதிக ரசிகர்களை பெற்றிருக்கும் சீரியல்களில் ஒன்று, பாண்டியன் ஸ்டோர்ஸ். ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்ற குடும்ப சீரியல், பல மொழிகளிலும் டப் செய்யப்பட்டுள்ளது.

இந்த சீரியலில் வரும் முல்லை கேரக்டரும், முல்லை - கதிர் இடையேயான ரொமான்ஸ் காட்சிகளும் மிகவும் பிரபலமானது. இதற்காக தனி ரசிகர் கூட்டமே உண்டு என்று கூட சொல்லலாம்.

 Did Kathir character to be changed in Pandian Stores serial

முல்லை கேரக்டரில் நடத்த சித்ராவின் திடீர் மரணம், அவரது குடும்பத்தினரை மட்டுமல்ல, பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சித்ரா மரணமடைந்ததால், அந்த கேரக்டரில் காவ்யா மாற்றப்பட்டார்.

காவ்யா வந்த பிறகு, கதிர் - முல்லை இடையேயான ரொமான்ஸ் காட்சிகள் இடம்பெறாதது, ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. இந்நிலையில் கதிர் கேரக்டரில் நடிக்கும் குமரனும் மாற்றப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

குமரனுக்கு பதிலாக விஜய் டிவி.,யின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த அஸ்வின், கதிர் கேரக்டரில் நடிக்க வைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது உண்மை தான் என்பது போல் கடந்த சில வாரங்களாக கதிர் கேரக்டரை காட்டவில்லை. குமரன் வேறு படத்தில் நடிப்பதால் அவரை காட்டவில்லை எனவும், அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகி விட்டதாக வந்த தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இது பற்றி சீரியல் தயாரிப்பாளர்களிடம் கேட்ட போது, இது முழுக்க முழுக்க வதந்தி எனவும், கதிர் கேரக்டரில் இருந்து குமரனை மாற்றவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X