ரஜினிகாந்தை சந்தித்தாரா பிரசாந்த் நீல்? கேஜிஎஃப் அளவுக்கு ஒரு பிரம்மாண்ட கதை சொல்லி இருக்காராம்!
சென்னை: ரஜினிகாந்தை வைத்து தான் ஒரு படம் இயக்கினால், ஆரம்பம் முதல் இறுதி வரை விசில் சத்தம் விண்ணை பிளக்கும் என ராஜமெளலி சில ஆண்டுகளுக்கு முன்னர் பேசியிருந்தார்.
கேஜிஎஃப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் கூட ரஜினியின் வெறித்தனமான ரசிகர் தானாம்.
கேஜிஎஃப் 2 படத்தை பார்த்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டிய நிலையில், இயக்குநர் பிரசாந்த் நீல் சமீபத்தில் ரஜினியை நேரிலேயே வந்து சந்தித்து சென்றதாக ஹாட் தகவல்கள் கசிந்துள்ளன.

ராஜமெளலி ஆசை
நடிகர் ரஜினிகாந்துக்கு ஒரு படம் பண்ண வேண்டும் என இயக்குநர் ராஜமெளலி பல முறை தனது விருப்பத்தை தெரிவித்து வந்தார். உடல்நலன் கருதியே ராஜமெளலி படத்தை தவிர்த்து வந்தார் ரஜினிகாந்த். ராணா படத்தை மாற்றி கோச்சடையான் அனிமேஷன் திரைப்படமாக உருவாக காரணமும் அதுதான்.

கோச்சடையான் அப்படி வந்திருந்தா
பாகுபலிக்கு முன்பே கோச்சடையான் படத்தை ரஜினிகாந்த் பண்ணி இருந்தார். ஆனால், அந்த படம் அனிமேஷன் படமாக வராமல் ரியல் ஆக்ஷன் படமாக மட்டும் வந்திருந்தால், கோலிவுட் சினிமா தான் முதல் 1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் சாதனையை படைத்திருக்கும் என்கின்றனர்.

ஆக்ஷனுக்கு ரெடி
இடையே சில படங்களில் ஆக்ஷனை தவிர்த்து இருந்த நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் ஆக்ஷனுக்கு ரெடியாகி விட்டார் என்றே தெரிகிறது. அண்ணாத்த படத்திலேயே அதகளம் பண்ண ரஜினி ஜெயிலர் படத்தில் அதை விட இன்னமும் வெறித்தனமான ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கப் போகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. டைட்டில் போஸ்டரிலேயே ரத்தக் கறையுடன் அரிவாள் இருக்க படத்தில் ஆக்ஷனுக்கு நிச்சயம் பஞ்சமே இருக்காது என்கின்றனர்.

ரஜினியை சந்தித்த பிரசாந்த் நீல்
இந்நிலையில், சமீபத்தில் கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் நடிகர் ரஜினிகாந்த் அவரது இல்லத்திற்கே வந்து சந்தித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. மேலும், ரஜினிக்கு அவர் ஒரு கதையையும் சொல்ல அதில் ரொம்பவே இம்ப்ரஸ் ஆகிவிட்டாராம் ரஜினிகாந்த் என நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

கேஜிஎஃப்க்கு பாராட்டு
கன்னட திரையுலகில் இப்படியொரு பிரம்மாண்ட படத்தை அதிலும், அந்த நிலத்தின் தங்க சுரங்க கதையை எடுத்து கையாண்ட விதம் எக்ஸலன்ட் என மனதார பாராட்டி இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். உங்களுக்கும் ஒரு கதை இருக்கு சார் என கிடைத்த கேப்பில் கேஜிஎஃப் இயக்குநர் கெடா வெட்டி இருப்பதாக கூறுகின்றனர்.

பிரம்மாண்டத்தின் உச்சம்
கேஜிஎஃப் கதையை விட ரஜினிக்காக இயக்குநர் பிரசாந்த் நீல் சொன்ன கதை பிரம்மாண்டத்தின் உச்சம் என்றும், ஜெயிலர் படத்தை முடித்து விட்டு பார்க்கலாம் என்பது போல ரஜினி சொல்லி அனுப்பி இருக்கிறார் என்றும் கூறுகின்றனர். அதுமட்டும் டேக் ஆஃப் ஆனால், ரியல் பான் இந்தியா படமாக ரஜினிக்கு அது அமையும் என்பது கன்ஃபார்ம்.


Click it and Unblock the Notifications











