ஒரு ‘செலிபிரிட்டி’ என்றால் யார்?.. விஜய்க்கு ஆதரவான கருத்தா?.. கிருத்திகா உதயநிதியின் போஸ்ட் வைரல்!
சென்னை: ஒரு 'செலிபிரிட்டி' என்றால் யார்? என்கிற கேள்வியுடன் கிருத்திகா உதயநிதி பதிவிட்டுள்ள மறைமுக ட்வீட் விஜய்க்கு ஆதரவான கருத்தை அவர் வெளிப்படுத்துகிறாரா? அல்லது அவரை ட்ரோல் செய்கிறாரா என்கிற விவாதங்களை எக்ஸ் தளத்தில் கிளப்பியுள்ளது.
காதலிக்க நேரமில்லை படத்தில் ரவி மோகனை ஹீரோவாக வைத்து கடைசியாக கிருத்திகா உதயநிதி இயக்கி இருந்தார். அந்த படத்துக்கு ஆதரவான விமர்சனங்களும் கடுமையான விமர்சனங்களும் கிளம்பின. பாக்ஸ் ஆபீஸில் படம் பெரிதாக ஓடவில்லை.

ஆனால், இன்றைய நவயுக காதலையும் ஈகோ மோதல்களையும் காலத்தின் கட்டாயம் காரணமாக மீண்டும் இணைவதையும் அந்த படத்தில் அழகாக ஏ.ஆர். ரஹ்மான் இசையுடன் சேர்த்துக் கொடுத்திருந்தார். ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ரவி மோகன் உள்ளிட்ட பிரபலங்களின் விவாகரத்து செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியதை போலவே தற்போது விஜய்யின் விவாகரத்து செய்தியும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கிருத்திகா உதயநிதி போஸ்ட்: "ஒரு 'செலிபிரிட்டி' என்றால் யார்? அது நீங்கள் யார் என்பதுக்கும், மக்கள் உங்களை எப்படி பார்க்கிறார்கள் என்பதுக்கும் இடையிலான ஒன்று.
ஒரு கட்டத்தில், நீங்கள் உண்மையில் யார் என்பதை மறந்து, மக்கள் உங்களைப் பற்றி கொண்டுள்ள எண்ணமே நீங்கள் என்று நினைக்கத் தொடங்கினால்... நீங்கள் பெரிய பிரச்சினையில் சிக்கிவிட்டீர்கள் என்று அர்த்தம்" என கிருத்திகா உதயநிதி தனது எக்ஸ் பக்கத்தில் திடீரென பதிவிட்டுள்ளது ஏன் என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.
விஜய்க்கு ஆதரவான கருத்து?: சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களாக மாறிவிட்டால் மக்களின் மனநிலையை சிந்தித்துக் கொண்டே வாழ்ந்தால் சொந்த வாழ்க்கையில் தோற்று விடுவார்கள் என்றும் பிரபலமாக இருந்தாலும் தனது வாழ்க்கையை வாழ்ந்து பார்ப்பது தான் சரியான மனநிலையாக இருக்கும் என்கிற தொனியில் தான் கிருத்திகா உதயநிதியின் இந்த போஸ்ட் அமைந்துள்ளது என்றும் கடந்த சில நாட்களாக விஜய்க்கு எதிரான ட்ரோல்களுக்கு எதிரான பதிலடி பதிவாக இது உள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
அவங்க கலாய்க்கிறாங்க: அதே சமயம் விஜய்க்கு ஆதரவாக கருத்து சொல்லவில்லை என்றும் அவங்க அவரை மறைமுகமாக பங்கமாக கலாய்க்கிறாங்க. இதுதான் வஞ்ச புகழ்ச்சி அணி என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. உதயநிதி ஸ்டாலினின் மனைவியும் இயக்குநருமான கிருத்திகா உதயநிதி யாரையும் குறிப்பிட்டு அந்த பதிவை போடாமல் பொத்தாம் பொதுவாக யாருக்கோ எதையோ உணர்த்தவே போஸ்ட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











