பக்ரீத் ஸ்பெஷல் ட்ரீட்...அட்லீ – ஷாருக்கான் படத்தில் இவர் தான் ஹீரோயினா ?

மும்பை : பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் தற்போது பதான் படத்தில் நடித்து வருகிறார். இதில் தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இந்த படத்தில் சல்மான் கானும் கெஸ்ட் ரோல் செய்கிறார்.

இதைத் தொடர்ந்து அட்லீ இயக்கும் படத்தில் நடிக்க ஓகே சொல்லி உள்ளார் ஷாருக்கான். ஆனால் இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி பல ஆண்டுகள் ஆகியும் எந்த முன்னேற்றமும் இல்லாததால் இப்படம் கைவிடப்பட்டதாக பல செய்திகள் வெளியாகின.

பதானை எதிர்பார்க்கும் ரசிகர்கள்

பதானை எதிர்பார்க்கும் ரசிகர்கள்

ஆனால் இந்த படம் விரைவில் துவங்கப்பட உள்ளதாக அட்லீ சமீபத்தில் அறிவித்தார். கடந்த 4 ஆண்டுகளாக ஷாருக் படம் எதுவும் வெளிவராத நிலையில், பதான் படத்தை ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ள நிலையில், கோலிவுட் ஹிட் டைரக்டருடன் ஷாருக் இணைய உள்ள தகவல் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

எது தான்ப்பா உண்மை

எது தான்ப்பா உண்மை

அட்லீ - ஷாருக்கான் இணையும் படத்திற்கு Sanki என பெயரிடப்பட்டுள்ளதாக சமீபத்தில் ஒரு தகவல் பரவியது. முழு நீள கமர்ஷியல் என்டர்டெயின்மன்ட் படம் என தகவலும், அதிரடி ஆக்ஷன் படம் என ஒரு தகவலும் பரவியது. ஷாருக்கான் இரட்டை வேடத்திலும் நடிக்கிறார் எனவும், உளவுத்துறை அதிகாரியாக நடிக்கிறார் எனவும் பலவிதமாக கூறப்பட்டது.

ஷாருக்குக்கு ஜோடி நயன்தாராவா

ஷாருக்குக்கு ஜோடி நயன்தாராவா

தற்போது லேட்டஸ்ட் தகவலாக இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக கோலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது இது உறுதியாகி உள்ளதாம்.

 பாலிவுட்டில் என்ட்ரியாகிறாரா நயன்தாரா

பாலிவுட்டில் என்ட்ரியாகிறாரா நயன்தாரா

இந்த படத்தின் மூலம் நயன்தாரா பாலிவுட்டிலும் அறிமுகமாக உள்ளாராம். இதற்கு முன் அட்லீ இயக்கிய பிகில் படத்தில் நயன்தாரா நடித்திருந்தார். ஏற்கனவே 4 மெகா ப்ரோஜக்ட் படங்களில் நடித்து வரும் நயன்தாரா, ஷாருக்கான் படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளாதாக கூறப்படுகிறது. ஷாருக்கான் - நயன்தாரா நடிக்கும் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X