லியோவில் இந்த விஜய் டிவி பிரபலமும் இருக்காரா.. அதுவும் அந்த பிளடி ஸ்வீட் சீன்லையா.. ட்விஸ்ட்டு!
சென்னை: லியோ படத்தின் காஸ்டிங் கார்டு மட்டும் மிக நீளமாக தியேட்டரில் ஓடும் என்பது கன்ஃபார்ம் ஆகி விட்டது. பாலிவுட்டின் பிரபல நடிகர் சஞ்சய் தத் முதல் விஜய் டிவி பிரபலம் வரை ஆன்போர்ட் ஆகி உள்ளதாக கூறுகின்றனர்.
வரும் அக்டோபர் 19ம் தேதி உலகம் முழுவதும் தியேட்டரில் வெளியாக உள்ள லியோ படத்துக்கு இப்போதே சில தியேட்டர்களில் பல்க் புக்கிங் கேட்க ஆரம்பித்து விட்டதாக தியேட்டர் ஓனர்கள் எல்லாம் யூடியூபில் பேட்டியளித்து வருகின்றனர்.

இந்நிலையில், விஜய் டிவி பிரபலம் ஒருவர் லியோ படத்தில் இணைந்துள்ள அறிவிப்பை அவரே மேடையில் சொல்லி உள்ள வீடியோ டிரெண்டாகி வருகிறது.
லியோவின் பிரம்மாண்ட காஸ்ட்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அனுராக் காஷ்யப், அர்ஜுன், மிஷ்கின், கெளதம் மேனன், சாண்டி, மன்சூர் அலி கான், மேத்யூ தாமஸ், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட பல பிரபலங்கள் லியோ படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், விஜய் டிவி பிரபலம் ஒருவரும் லியோ படத்தில் நடித்துள்ளதாகவும் முக்கியமான ரோல் என்றும் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.
லியோவில் கேபிஒய் பாலா?: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி படத்தில் விஜய் டிவியின் தீனா முக்கிய ரோலில் நடித்திருப்பார். மேலும், மாஸ்டர் படத்திலும் தீனா தலையை காட்டியிருப்பார்.
இந்நிலையில், விஜய் டிவியின் தொகுப்பாளர் கேபிஒய் பாலா லியோ படத்தில் நடித்திருப்பதாக சமீபத்தில் மேடை ஒன்றில் பேசிய வீடியோ டிரெண்டாகி வருகிறது.
பிளடி ஸ்வீட் சீனில்: கேபிஒய் பாலா சந்தோஷமாக லியோ படத்தில் நடித்திருக்கிறேன் என மேடையில் சொன்னதும், அறந்தாங்கி நிஷா எந்த சீனில் டா நடிச்ச சொல்லுடா எனக் கேட்க, பிளடி ஸ்வீட்னு விஜய் சொல்லுவாரே என பில்டப் கொடுத்துட்டு, அந்த சீனில் 20 கார் வரும்ல, அதில் ஒரு காரில் டிக்கியில் படுத்துட்டு வருவேன், கரெக்ட்டா கண்டுபிடிச்சு பார்த்துடுங்க என காமெடி பண்ணி சீரியஸாக கேட்டுக் கொண்டிருந்த ரசிகர்களை சிரிக்க வைத்து விட்டார்.
தொடர்ந்து பல நல்ல காரியங்களை செய்து வரும் பாலாவுக்கு நிச்சயம் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











