தளபதி 67 டைட்டில் இதுதானா? குருதியில் புள்ளி வைத்து விஜய்யின் உருவத்தை கோலம் போட்டது அதுக்குத்தானா?
சென்னை: தளபதி 67 படத்தின் டைட்டில் அறிவிப்பே இன்று வெளியாகும் என அதிரடியாக நேற்று ஒரு ஹாட் அப்டேட்டை கொடுத்து விஜய் ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா உலகினரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது படக்குழு.
படம் வெளியாகும் சமயத்தில் தான் டைட்டிலை சீக்ரெட்டாக அறிவித்து வந்த நிலையில், திடீரென ஆரம்பிக்கும் போதே நெத்தியடியாக டைட்டிலை சொல்லி ஆரம்பிக்கிறேன் என லோகேஷ் கனகராஜ் சும்மா கில்லியாக தனது களத்தில் விளையாடி வருகிறார்.
ரத்தத்தில் வரையப்பட்ட விஜய்யின் உருவத்தை பார்த்த ரசிகர்கள் படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என ஏகப்பட்ட கெஸ்களை சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.

இந்த அப்டேட் போதுமா
சில தயாரிப்பு நிறுவனங்கள் நடிகருடன் எந்த நடிகை ஹீரோயினாக நடிக்கிறார் என்கிற அறிவிப்பையே பல மாதங்கள் கழித்து சொல்லி வரும் சூழலில் அதிரடியாக படம் ஆரம்பித்த உடனே ரசிகர்களை காக்க வைக்கக் கூடாது என ஒரு வாரத்திற்கு அப்டேட் மழை பொழிந்து விஜய் ரசிகர்களை சந்தோஷக் கடலில் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ ஆழ்த்தியுள்ளது.

காஸ்ட் முதல் ஓடிடி ரைட்ஸ் வரை
விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கெளதம் மேனன், மன்சூர் அலி கான், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ் என பலரது பெயர்களை அடுக்கடுக்காக அறிவித்து படம் எப்படி இருக்கப் போகுது என்கிற எதிர்பார்ப்பை உச்சகட்டத்துக்கே எகிற வைத்துள்ளனர். மேலும், சன் டிவி சாட்டிலைட் உரிமத்தையும் நெட்பிளிக்ஸ் ஓடிடி உரிமத்தையும் வாங்கி விட்டதாகவும் அறிவித்துள்ளனர்.

இன்ட்ரோ ப்ரோமோ
மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களுக்கு பிறகு கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் டைட்டில் ப்ரோமோ வெளியிட்டே ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். படமும் வெளியாகி 400 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்து இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது. இந்நிலையில், தளபதி 67 படத்துக்கும் அதே போன்றதொரு இன்ட்ரோ ப்ரோமோ உருவாக்கப்பட்டுள்ள நிலையில், அதுதான் இன்று வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கூடுதல் போனஸாக டைட்டில் அறிவிப்பையும் சேர்த்து சொல்றோம் என சொல்லி கொண்டாட வைத்துள்ளனர்.

டைட்டில் என்ன
தளபதி 67 படத்தின் டைட்டில் இன்று மாலை 5 மணிக்கு அதிரடியாக வெளியாக உள்ள நிலையில், நேற்று வெளியான விஜய்யின் ரத்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் டைட்டில் என்ன என கெஸ் செய்து வருகின்றனர். ராய்ஸ், ஈகிள், கேங் என ஏகப்பட்ட டைட்டில்களையும் பதிவிட்டு இதில் ஏதாவது ஒன்று தான் இருக்கும் என கெஸ் செய்து வருகின்றனர்.

குருதி
கோட் ரெட் என டைட்டில் வைத்து விட்டால் தளபதி 67 படமும் எல்சியூ படம் என்பது கன்ஃபார்ம் ஆகிவிடும். ஆனால், அதற்கு பதிலாக குருதி என்கிற தமிழ் தலைப்பையும் ரசிகர்கள் சிந்தித்து வருகின்றனர். கமல்ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் குருதிப்புனல் படத்தில் இருந்து குருதி டைட்டிலை வைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. ரத்தம் என்கிற டைட்டிலில் ஏற்கனவே விஜய் ஆண்டனி படம் உள்ள நிலையில், குருதி டைட்டிலாக இருக்கலாம் என அதிகபட்சம் எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் இன்று மாலை உறுதியாகிவிடும்.


Click it and Unblock the Notifications











