twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நெஞ்சு வலியுடன் மருத்துவமனைக்கு தானே காரை ஓட்டிச் சென்றாரா இயக்குநர் கே.வி. ஆனந்த்?

    |

    சென்னை: இயக்குநர் கே.வி. ஆனந்தின் திடீர் மரணம் ஒட்டுமொத்த சினிமா உலகையே சோகக் கடலில் ஆழ்த்தி உள்ளது.

    Recommended Video

    KV Anand -திற்கு நடந்தது என்ன? முழு விவரம் | #RIPKVAnand

    உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் 24ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கே.வி. ஆனந்த் இன்று அதிகாலை 3 மணிக்கு காலமானார்.

    விதவையான கேமரா கேவிக்கேவி அழுகிறது.. கே.வி.ஆனந்த் திடீர் மரணம்.. கவிஞர் வைரமுத்து உருக்கம்! விதவையான கேமரா கேவிக்கேவி அழுகிறது.. கே.வி.ஆனந்த் திடீர் மரணம்.. கவிஞர் வைரமுத்து உருக்கம்!

    நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு தானே காரை ஓட்டிச் சென்று அட்மிட் ஆனார் கே.வி. ஆனந்த் என்கிற தகவல் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

    அடுத்த பிரம்மாண்டம்

    அடுத்த பிரம்மாண்டம்

    இயக்குநர் ஷங்கரின் முதல்வன், பாய்ஸ், சிவாஜி உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கே.வி. ஆனந்த், தனது படங்களையும் ஷங்கர் படங்களை போலவே பிரம்மாண்டமாக இயக்க ஆரம்பித்தார். அயன், மாற்றான், கோ, அனேகன், காப்பான் உள்ளிட்ட படங்களின் கதைகளும் காட்சி அமைப்புகளும் பிரம்மாண்டமாகவே இருக்கும்.

    சமூக அக்கறை

    சமூக அக்கறை

    இயக்குநர் ஷங்கர் போலவே இவரது படங்களிலும் சமூக அக்கறை கருத்துக்கள் அதிகமாக பொதிந்து இருக்கும். நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான மாற்றான் படம் அப்படியே ஷங்கர் பாணியில் சமூக அக்கறை மற்றும் அறிவியல் ரீதியான அணுகுமுறைகள் அதிக அளவில் காணப்படும்.

    திடீர் மரணம்

    திடீர் மரணம்

    இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன், நடிகர் விவேக், இயக்குநர் தாமிரா என கடந்த வருடத்தை போலவே இந்த ஆண்டும் தமிழ் சினிமா பிரபலங்களின் மரணங்கள் தொடர்வது சினிமா ரசிகர்களையும் பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வரும் நிலையில், இயக்குநர் கே.வி. ஆனந்தின் இந்த திடீர் மரணம் பலரையும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.

    கார் ஓட்டிச் சென்றாரா

    கார் ஓட்டிச் சென்றாரா

    சென்னை அடையாறில் வசித்து வந்த இயக்குநர் கே.வி. ஆனந்த் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனைக்கு தானே கார் ஓட்டிச் சென்று அட்மிட் ஆனார் என்கிற தகவல் ஒன்றும் வைரலாகி வருகிறது. ஆனால், இது தொடர்பான உறுதியான தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரபலங்கள் சோகம்

    பிரபலங்கள் சோகம்

    இயக்குநர் கே.வி. ஆனந்த் திடீரென உயிரிழந்த சோகத்தை அறிந்த சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் அவருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், பலர் 54 வயதில் திடீரென கே.வி. ஆனந்த் உயிரிழந்ததை நம்ப முடியாமல் அதிர்ச்சியில் ட்வீட்களை போட்டு வருகின்றனர்.

    English summary
    KV Anand driving his car and admits hospital by himself details shocked his fans. but unfortunately, he will dies after treatment gets failure.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X