லியோ மன்சூர் அலி கான் சீன் ரீஷூட் செய்யப்பட்டதா?.. விடாமல் அடிக்கும் ரஜினி ரசிகர்கள்.. என்ன ஆச்சு?

சென்னை: லியோ படத்தையே தோல்வி படம் என ரஜினி ரசிகர்கள் சொல்லி வரும் நிலையில், 540 கோடி வசூல் அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டும் நம்ப மாட்டோம் என்றும் ஜெயிலர் வசூல் 700 கோடி என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் பொய் சொல்றாரு என அவருடைய பேட்டியை ட்ரோல் செய்த நிலையில், அந்த பர்ஸ்பெக்டிவ் காட்சியையும் இதோ வெளியிடுறோம் என லியோ படக்குழு நேற்று வெளியிட்டது.

Did Leo Director Lokesh Kanagaraj done a reshoot for Mansoor Ali Khan perspective scene?

ஆனால், அதுவும் அவசரமாக ரீஷூட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது என்றும் கெளதம் மேனனை காணோம், கைதி டிரெஸ்ஸில் ஸ்ட்ரைப் இல்லை என கண்டுபிடித்து கலாய்த்து வருகின்றனர்.

ஓவர் முட்டு: முடிஞ்சி போன கல்யாணத்துக்கு மேளம் அடிப்பது போல லியோ படக்குழு தொடர்ந்து நெகட்டிவ் ட்ரோல்களுக்கு பதில் அளிக்கிறோம் என்கிற பெயரில் ஓவர் முட்டுக் கொடுத்து வருகின்றனர். அப்படியே விட்டாலே யாரும் அதை பற்றி பேசமாட்டார்கள். ஆனால், தொடர்ந்து ஆதாரம் தருகிறோம் என தொடர்ந்து கன்டென்ட் கொடுத்து வருகின்றனர்.

ரீஷூட் செஞ்சிட்டாங்க: ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் காக்கா - கழுகு கதை சொன்னதற்கு பின்னர் தான் லியோ படத்தில் அந்த கிளைமேக்ஸ் கழுகு சீனே ரீஷூட் செய்து வைக்கப்பட்டது என மீசை ராஜேந்திரன் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்த நிலையில், மன்சூர் அலி கான் சொல்லும் இது என்னோட பர்ஸ்பெக்டிவ் காட்சியும் ரீஷூட் செய்யப்பட்டு தற்போது வெளியிட்டுள்ளனர் என்றும் மண்டை மேல உள்ள கொண்டையை மறைக்கவில்லையே என மன்சூர் அலி கானின் டிரெஸ் மிஸ் மேட்ச் ஆகுது என்றும் கெளதம் மேனனையே காணவில்லை என்றும் மீண்டும் கலாய்த்து வருகின்றனர்.

இது ஒரு டேக்: சினிமாவில் பல டேக்குகள் எடுக்கப்படும் என்றும் இது ஒரு டேக் என்றும் கடைசியாக மன்சூர் அலி கான் சிரிக்கும் காட்சியில் இன்னொரு பக்கத்தில் ஸ்ட்ரைப் இருக்கும் பாருங்க என கன்டினியூட்டி மிஸ்ஸிங் குறை தான் அது என விஜய் ரசிகர்கள் இன்னொரு பக்கம் விளக்கம் கொடுத்து வருகின்றனர்.

வெற்றி விழா: இன்று நடைபெற உள்ள லியோ வெற்றி விழாவில் நடிகர் விஜய் என்ன பேசப் போகிறார் என்றும் லியோ 2 அறிவிப்பை லோகேஷ் கனகராஜ் வெளியிடுவாரா? என்றும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதே நேரத்தில் என்ன பேசினாலும், அதை அடுத்த ஒரு வாரத்துக்கு ட்ரோல் மெட்டீரியலாக மாற்றுவது என்கிற நோக்கில் ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் ரெடியாக உள்ளதாக கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X