Vijay speech: இன்னொரு குட்டி ஸ்டோரி.. அப்படியே ரஜினிக்கு ஐஸ் வைத்த விஜய்.. அடுத்த சூப்பர்ஸ்டார்?
சென்னை: லியோ வெற்றி விழாவில் படத்தின் வெற்றியை பற்றி பேசியது போலவே தெரியவில்லை. அதற்கு பதிலாக அடுத்த தேர்தல் மற்றும் அடுத்த சூப்பர்ஸ்டார் பட்டம் குறித்து மட்டுமே இசை வெளியீட்டு விழாவுக்காக தயார் செய்து வைத்த காக்கா - கழுகு கதை உள்ளிட்டவற்றே விஜய் பேசியிருப்பதாக தெரிகிறது.

550 கோடி வசூலை லியோ திரைப்படம் தாண்டி 600 கோடியை நோக்கி சென்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வாரமும் பெரிய படங்கள் ரிலீஸ் இல்லாத நிலையில், நாளை மாலை முதல் மீண்டும் லியோ திரைப்படம் பிக்கப் ஆனால், சனி மற்றும் ஞாயிறு வசூல் சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காக்கா - கழுகு குட்டி ஸ்டோரியை சொன்ன நடிகர் விஜய் ஒரு பையன் அப்பா சட்டையை போட ஆசைப்படுவதில் என்ன சார் தப்பு என இன்னொரு குட்டி ஸ்டோரியையும் சொல்லியிருக்கிறார்.
சூப்பர்ஸ்டார் ஒருத்தர்தான்: மக்கள் திலகம்னா ஒருத்தர் தான், நடிகர் திலகம்னா ஒருத்தர்தான், புரட்சிக் கலைஞர் கேப்டன்னா ஒருத்தர்தான், உலக நாயகன்னா ஒருத்தர்தான் அதே போல சூப்பர்ஸ்டார்னா ஒருத்தர்தான், தலன்னா ஒருத்தர்தான் என நடிகர் விஜய் பேசி விட்டு கடைசியில் மக்களாகிய நீங்கள் தான் மன்னர்கள் உங்களுக்கு சேவை செய்யும் தளபதி தான் நான் கட்டளையிடுங்க என பேசியிருந்தார்.

அப்பா சட்டைக்கும் சேருக்கும் ஆசைப்படக்கூடாதா?: ஒரு வீட்டில் ஒரு சின்ன பையன் அவங்க அப்பா சட்டையை போடுவான், அது தொல தொலன்னு ஃபிட்டா இல்லைன்னாலும் போட ஆசைப்படுவான்.. அப்பா வாட்ச் எடுத்துக் கட்டிப்பான்.. அப்பா சேர்ல உட்கார ஆசைப்படுவான்.. அந்த சேர்ல உட்கார தகுதியிருக்கா இல்லையான்னுலாம் பார்க்க மாட்டான்.. இதுல ஏதாவது தப்பு இருக்கா.. அவன் அவங்க அப்பாவா ஆக ஆசைப்படுறதுல என விஜய் பேசியதும் ரஜினிகாந்தை குறித்து தான் பேசுகிறார் என்றும் அடுத்த சூப்பர்ஸ்டாருக்கு நைசாக அடிபோட்டு விட்டார் விஜய் என்றும் ரஜினி ரசிகர்கள் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

அப்பா ஸ்தானத்தில்: நடிகர் ரஜினிகாந்தை எதிரியாக விஜய் நினைக்கிறார் என கடந்த சில மாதங்களாக ரஜினி ரசிகர்கள் பலரும் விஜய்க்கு எதிராகவும் லியோவுக்கு எதிராகவும் பேசி வந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தை அப்பா ஸ்தானத்தில் வைத்து இருக்கிறார் விஜய் என்று தெரிந்ததும் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் சரத்குமார் பேசும்போதே சொல்லி இருந்தால் இவ்வளவு வன்மத்தை கொட்டியிருக்க மாட்டோமே என கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











