Spider-Man படத்தில் மெஸ்ஸி?.. ஒரு டயலாக்கிற்கு ரூ.28.6 கோடி சம்பளமா? அடேங்கப்பா தலையே சுத்துதே!

சென்னை: கால்பந்து உலகின் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி ஹாலிவுட்டின் பிரபல சூப்பர் ஹீரோ திரைப்படமான Spider-Man: Brand New Day படத்தில் நடித்திருப்பதாகவும், அதற்காக ரூ.143 கோடி சம்பளம் பெற்றிருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வேகமாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்த நிலையில், அந்த தகவலின் உண்மை என்ன என்பது குறித்தும் இணையத்தில் விவாதம் கிளம்பியுள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாகும் பதிவுகளின்படி, Spider-Man: Brand New Day திரைப்படத்தில் மெஸ்ஸி சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாகவும், வெறும் ஐந்து வாரங்கள் மட்டுமே நடைபெற்ற படப்பிடிப்பில் பங்கேற்று, அதற்காக ரூ.143 கோடி சம்பளம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. மேலும், படத்தில் அவரது மொத்த திரைநேரம் மூன்று நிமிடங்கள் மட்டுமே என்றும் அந்த பதிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த தகவல் வெளியானதும், "மூன்று நிமிட காட்சிக்கு இவ்வளவு பெரிய சம்பளமா?", "ஹாலிவுட்டிலும் மெஸ்ஸி மாஸ் காட்டப் போகிறாரா?" என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆச்சரியத்துடன் கேள்விகளைப் பதிவிட்டு வருகின்றனர். சிலர் இதை உண்மை என நம்பி பகிர்ந்து வர, மற்றொரு தரப்பினர் இந்த தகவலுக்கு எந்த அதிகாரப்பூர்வ ஆதாரமும் இல்லை என்று எடுத்துச் சொல்லி, தேவையில்லாத ஆதாரமில்லாத பொய்த் தகவலைப் பரப்பாதீர்கள் என்று பதிவிட்டு வருகிறார்கள்.

A viral claim says Lionel Messi earned 143 crore 28 6 Crore for Each Dialogue for a Spider-Man Brand New Day cameo

குறிப்பாக, Spider-Man: Brand New Day திரைப்படம் தொடர்பாக இதுவரை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்புகளில் லியோனல் மெஸ்ஸி நடித்ததாக எந்த தகவலும் இடம்பெறவில்லை. அதேபோல், தயாரிப்பு நிறுவனம் அல்லது படக்குழுவும் இதுகுறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த முடியாது என்று ஸ்பைடர் மேன் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

உண்மை இல்லை: சமீபகாலமாக ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் போலி தகவல்கள் அதிக அளவில் பரவி வரும் நிலையில், பிரபலங்களை வைத்து இதுபோன்ற செய்திகள் சிலர் திட்டமிட்டே கூட பரப்பலாம் என்றும் பேச்சுக்கள் அடிபடுகிறது. அதனால் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் வரை இதுபோன்ற தகவல்களை உறுதிப்படுத்தப்பட்ட செய்தியை கண்மூடித் தனமாக நம்பக் கூடாது. மேலும் மெஸ்ஸி போன்ற உலகப் புகழ் பெற்ற ஜாம்பவான் தங்களது படத்தில் நடித்துள்ளார் என்றால், எந்த படக்குழுவும் மாஸான பில்டப் உடன் தான் அப்டேட்களைக் கொடுக்கும். அப்படி இல்லை என்றால் படத்தில் சர்ப்ரைஸ் காட்சிகளாக இடம் பெறச் செய்துவிடுவார்கள். ஆனால் தற்போது பரவி வரும் தகவலில் உண்மைத் தன்மையே பலராலும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.

ஒரு டயலாக்கிற்கு: இதனால், மூன்று நிமிடக் காட்சி ஐந்தே ஐந்து டயலாக் அதற்காக ரூ.143 கோடி சம்பளம் என்றால் ஒரு டயலாக்கிற்கு 28.6 கோடி சம்பளம் என்ற கணக்கு வருகிறது என்று நெட்டிசன்கள் வாயைப் பிளப்பதையும் பார்க்க முடிகிறது. மெஸ்ஸி தற்போது நடைபெற்று வரும் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து 2026இல் தனது அர்ஜெண்டினா அணியை ரவுண்ட் ஆஃப் 16க்கு அழைத்துச் சென்றுள்ளார். ரவுண்ட் ஆஃப் 32 என்ற நாக் அவுட் சுற்றில் கேபோ வெர்டா என்ற அணியை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X