Leo Vijay: லியோவில் வால்வரின் ட்ரீட்மென்ட்டை விஜய்க்கு செய்த லோகேஷ் கனகராஜ்.. இதை கவனிச்சீங்களா?

சென்னை: மார்வெல் மற்றும் காமிக்ஸ்களின் வெறித்தனமான ரசிகரான லோகேஷ் கனகராஜ் ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் எனும் ஹாலிவுட் படத்தை தழுவி லியோவை உருவாக்கி இருந்தாலும், அதில் நடிகர் விஜய்க்கு எக்ஸ்மென் படத்தில் வரும் வால்வரின் ட்ரீட்மென்ட்டை கொடுத்திருப்பது போன்று தான் தெரிகிறது.

Did Lokesh Kanagaraj gives Wolverine treatment to Actor Vijay role in Leo?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் அக்டோபர் 19ம் தேதி வெளியான திரைப்படம் வசூலில் சக்கைப் போடு போட்டு வருகிறது.

முதல் பத்து நிமிஷத்திலேயே ஹாலிவுட் தர படத்தை கொடுத்து மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ் ஆக்‌ஷன் காட்சிகளிலும் கடைசி வரை தனது மேக்கிங் தரத்தின் மூலம் விஷுவல் ட்ரீட் கொடுத்துள்ளார்.

வால்வரின்: அதீத சக்திகள் இருந்தாலும், குடும்பத்திற்காக அனைத்திலும் ஒதுங்கி இருக்கும் கேரக்டர் தான் வால்வரின். அதே போலத்தான் லியோவில் நடிகர் விஜய் தனது குடும்பத்தின் மீது மட்டுமே அக்கறை கொண்டவராகவும், மற்ற விஷயங்களில் பெரிதாக தலையிடாத நபராகவும் லோகேஷ் கனகராஜ் சித்தரித்து இருக்கிறார்.

சட்டையை கழட்டி: அடிக்கடி நடிகர் விஜய் தனது சட்டையை கழட்டி பேர் பாடியை காட்டும் காட்சிகளும் ரசிகர்களுக்கு வால்வரினை நினைவுப்படுத்தாமல் இருக்காது. விஜய்யின் தோற்றமும் கிட்டத்தட்ட ஹக் ஜாக்மேன் நடித்த வால்வரின் பாதிப்பே என்றே தெரிகிறது.

Did Lokesh Kanagaraj gives Wolverine treatment to Actor Vijay role in Leo?

கத்தும் காட்சிகள்: பார்த்திபனாக விஜய் நடித்துள்ள நிலையில், அவர் கத்தும் காட்சிகளில் எல்லாம் கையில் இருந்து அந்த வால்வரின் கத்தி வந்து விடாதா என எண்ணத் தோன்றும் அளவுக்கு லோகேஷ் கனகராஜ் அவரது கதாபாத்திரத்தை டிசைன் செய்திருக்கிறார் என்று தான் தெரிகிறது. தனியாளாக எத்தனை பேரை வேண்டுமானாலும் பந்தாடக் கூடிய வலிமை மிகுந்த நபராகவே லியோ கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் 3ல் சம்பவம் இருக்கு: விக்ரம் 3 படத்தில் விஜய்யை சம்மதிக்க வைக்க கமல் முயற்சி செய்ய முடியாது என சொல்லி விட்டு விலகும் விஜய் கிளைமேக்ஸில் லியோ என்ட்ரி கொடுத்தால், அது கண்டிப்பாக ரோலக்ஸுக்கு எதிராகத்தான் இருக்கும் என்றும் ரசிகர்கள் இப்போதே எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகின்றனர். சூப்பர் ஹீரோக்களாக இல்லை என்றாலும், ஆக்‌ஷன் சூப்பர் ஹீரோக்களாக தமிழ் சினிமாவில் ஒரு எல்சியூ பக்காவாக எண்ட் கேம் உடன் முடிந்தால் அதுவே ரசிகர்களுக்கான வேறலெவல் என்டர்டெயின்மென்ட் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X