கைவிரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. கோபத்தில் அன்ஃபாலோ செய்தாரா லோகேஷ் கனகராஜ்.. என்ன ஆச்சு?

சென்னை: இந்த ஆண்டு தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவே பெரிதும் எதிர்பார்த்த படம் கூலி. சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட அந்த திரைப்படம் அதிகபட்சமாக 500 கோடி வரை வசூல் செய்ததாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. ஆனால், தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் 404 கோடி வசூல் என்பதை மட்டுமே கடைசியாக போஸ்டர் அடித்து அறிவித்தது.

ஜெயிலர் படத்தின் வெற்றிக்குப் பிறகு ரஜினிகாந்த், நெல்சன், அனிருத்துக்கு கார் பரிசு வழங்கியது போல எல்லாம் இந்த முறை கலாநிதி மாறன் எதையுமே செய்யவில்லை. கூலி திரைப்படம் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்பதை தாண்டி வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றி பெறவில்லை என்றே கூறுகின்றனர்.

Did Lokesh Kanagaraj unfollow Rajinikanth and Kamal Haasan in social media

125 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட கன்னட திரைப்படமான காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் 885 கோடி வரை வசூல் ஈட்டி மிகப்பெரிய சாதனை படைத்து இந்த ஆண்டு அதிக வசூல் ஈட்டிய இந்திய படமாக மாறியது.

கூலி காலி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, அமீர்கான், உபேந்திரா, சத்யராஜ், செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன், நித்யா ராம், பூஜா ஹெக்டே என ஏகப்பட்ட நடிகர்களை வைத்து பிரம்மாண்டமாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி திரைப்படம் ஏ சான்றிதழ் உடன் வெளியான நிலையில், படம் பார்த்தவர்கள் எல்லாம் இது ரொம்பவே வொர்ஸ்ட்டான சூப்பர் ஸ்டார் படம் என கடுமையாக விமர்சித்த நிலையில், லோகேஷ் கனகராஜுக்கு மிகப்பெரிய அடி விழுந்தது. முன்னதாக அவர் இயக்கிய லியோ படமும் முதல் பாதி தான் நல்லா இருந்தது என்றும் 2வது பாதி சொதப்பல் என கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், அதற்கெல்லாம் பதிலடி தருவேன் என சொல்லிவிட்டு மொத்த படத்தையும் சொதப்பி வைத்து விட்டார்.

இயக்குநரை மாற்றிய ரஜினிகாந்த்: அடுத்ததாக கமல்ஹாசன் - ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என பில்டப் செய்யப்பட்ட நிலையில், அதற்கு ரஜினிகாந்த் பெரிய நோ சொல்லிவிட்டார். கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்தை சுந்தர். சி இயக்குகிறார். ரஜினிகாந்த் - கமல் நடிக்கும் படத்தை நெல்சன் அல்லது அட்லி இயக்குவார்கள் என பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது.

அன்ஃபாலோ செய்தாரா லோகேஷ்: இந்நிலையில், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனை லோகேஷ் கனகராஜ் அன்ஃபாலோ செய்துவிட்டார் என்றும் ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் இப்படி செய்துவிட்டார் என்றும் சோஷியல் மீடியாவில் விவாதங்கள் வெடித்துள்ளன. ஆனால், லோகேஷ் கனகராஜின் ஃபாலோ லிஸ்ட் மொத்தமாக காட்டாத சூழலில் இது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால், கண்டிப்பாக லோகேஷ் கனகராஜ் அப்படி செய்யக் கூடிய ஆள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் மீது அவருக்கு எப்போதுமே மிகப்பெரிய மரியாதையும் அன்பும் இருக்கத்தான் செய்யும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X