Lover's Day 2024: கவினின் டாடா நிகழ்த்திய மேஜிக்கை லவ்வர் நிகழ்த்துமா?.. மணிகண்டன் மாஸ் காட்டுறாரே!
சென்னை: இந்த ஆண்டு காதலர் தினத்திற்கு சரியான ரிலீசாக மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள லவ்வர் திரைப்படம் வரும் பிப்ரவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த், தனியா பாலகிருஷ்ணா, அனந்திகா, செந்தில், நிரோஷா மற்றும் தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படமும் அதே நாளில் போட்டியாக வெளியாகிறது.
ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் கிரிக்கெட் மற்றும் மத பிரச்சனையை மையமாக வைத்து உருவாகியுள்ள நிலையில், காதலர்கள் சந்திக்கும் பிரச்சனையை கருவாக கொண்டு உருவாகியுள்ள லவ்வர் திரைப்படம் கடந்த ஆண்டு கவின் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த டாடா படத்தை போல பீட் கொடுக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

காதலர் தினத்துக்கு வெளியான கவின் படம்: சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையனாக நடித்து அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்த கவின் பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டு மேலும் ரசிகர்களை கவர்ந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் நடிப்பில் வெளியான லிப்ட், டாடா உள்ளிட்ட படங்கள் தொடர்ந்து வெற்றி அடைந்த ஒரு நிலையில் அடுத்த ஸ்டார் படத்தில் நடித்து வருகிறார். கணேஷ் கே. பாபு இயக்கத்தில் கடந்தாண்டு காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 10-ஆம் தேதி வெளியான டாடா திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்திருந்த அபர்ணா தாஸ் இது மலையாள நடிகை நடித்திருந்தார். குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை டாடா பெற்றது.
டாடா மேஜிக்கை நிகழ்த்துமா லவ்வர்?: பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன் மற்றும் ஸ்ரீ கௌரி பிரியா நடிப்பில் உருவாகியுள்ள லவ்வர் திரைப்படம் வரும் 9-ஆம் தேதி வெளியாகிறது. கடந்த ஆண்டு மணிகண்டன் நடிப்பில் வெளியான குட்நைட் திரைப்படம் பெரிய ஹிட் அடித்த நிலையில், அதே போல இந்த படமும் அவருக்கு இன்னொரு வெற்றி படமாக மாறும் என்றே தகவல்கள் வெளியாகியுள்ளன. லால் சலாம் திரைப்படம் பெரிய படம் என்றும் அந்தப் படத்துடன் எங்கள் சின்ன படம் போட்டியிடாது. நாங்கள் எல்லைக்குள் ஓடுகிறோம் என தொடர்ந்து அந்த படத்தின் புரமோஷனுக்காக பல யூடியூப் சேனல்கள் பேட்டி அளித்து வருகிறார் மணிகண்டன்.

காதலர்கள் தான் டார்கெட்: இந்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு காதல் படமாக லவ்வர் என்னும் டைட்டில் உருவாகியுள்ள மணிகண்டனின் திரைப்படம் பிப்ரவரி 9 முதல் பிப்ரவரி 14 என தொடர்ந்து காதலர்களை தியேட்டருக்கு வரவழைத்து விட்டாலே போதும் அந்த படம் வெற்றி படமாக அமைந்து விடும் என்று விநியோகஸ்தர்கள் ரொம்பவே நம்பிக்கை விடும் அந்த படத்தை வாங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எதார்த்தமாக பேசுவதும் நடிப்பதும் என மணிகண்டன் தொடர்ந்து ரசிகர்கள் பலரையும் கவர்ந்து வரும் நிலையில் இந்த படத்தின் ரிசல்ட் அவருக்கான இடத்தை உறுதி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலஜியில் லாலா குண்டா பொம்மைகள் கதையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த ஜிகர்ததங்கா புகழ் ஸ்ரீ கெளரி பிரியா இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











