அஜித்துக்கு போட்டியாக லைகா வெளியிட்ட அறிவிப்பு?.. இந்தியன் 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போ?

சென்னை: லைகா தயாரிப்பில் அஜித்குமார் விடாமுயற்சி படத்தில் நடித்து வந்த நிலையில், அந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு அடுத்ததாக அஜித்குமார் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

குட் பேட் அகலி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது தாறுமாறாக வெளியாகி உள்ளது. அந்த போஸ்டருக்கு போட்டியாக தற்போது லைகா நிறுவனம் எந்தவொரு முன்னறிவிப்புமின்றி திடீரென இந்தியன் 2 படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

Did Lyca announced Indian 2 first single update to clash with Ajith Kumar s Good Bad Ugly update

அஜித் குமார் மற்றும் லைகா நிறுவனத்துக்கு இடையே பனிப்போர் நிலவி வருவதை இது சுட்டிக் காட்டுவதாக அஜித் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

இந்தியன் 2 ஃபர்ஸ்ட் சிங்கிள்: 28 ஆண்டுகளுக்கு முன்னதாக வெளியான இந்தியன் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். ஷங்கருக்கும் இடையே என்ன பிரச்சனை ஏற்பட்டது எனக்கு தெரியவில்லை இந்தியன் 2 படத்துக்கு அனிருத்தை இசையமைப்பாளராக ஷங்கர் ஒப்பந்தம் செய்துள்ளார். அனிருத் இசையில் வரும் மே 22-ஆம் தேதி இந்தியன் 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என்கிற அறிவிப்பை தற்போது லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்தியன் 2 ரிலீஸ்: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், எஸ்.ஜே. சூர்யா, பாபி சிம்ஹா, ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் மற்றும் மறைந்த நடிகர்களான நெடுமுடி வேணு, விவேக் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஜூலை மாதம் 12-ஆம் தேதி உலக அளவில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகும் என்கிற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

Did Lyca announced Indian 2 first single update to clash with Ajith Kumar s Good Bad Ugly update

குட் பேட் அக்லி அப்டேட்டுக்கு எதிராக?: லைகா நிறுவனம் இதுவரை விடாமுயற்சி படத்தின் அப்டேட்டை வெளியிடாமல் இருந்து வந்த நிலையில், குட் பேட் அக்லி படத்தின் அப்டேட் வெளியான நிலையில் அதற்கு எதிராக இந்தியன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளதாக அஜித் ரசிகர்கள் அந்த நிறுவனத்தை திட்டி வருகின்றனர். மேலும், இந்த ஆண்டு விடாமுயற்சி திரைப்படம் வருமா இல்லையா என்பதை அறிவிக்க வேண்டும் என கேட்டு கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

குதிரையில் வரும் இந்தியன்: பொன்னியின் செல்வன் படத்தின் வைப் இன்னும் அடங்கவில்லையா என்றும் இந்தியன் தாத்தா குதிரையில் வரும் சில்லவுட் ஷாட்டை ஏன் வெளியிட்டுள்ளனர் என்றும் 'பொன்னி நதி' பாடல் தான் சட்டென நினைவுக்கு வருவதாக ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X