தளபதி 66 சூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை கசிய விட்டாரா மனோபாலா? குழப்பத்தில் விஜய் ரசிகர்கள்!

சென்னை: இயக்குநர் வம்சி இயக்கத்தில் ஹைதராபாத்தில் நடிகர் விஜய்யின் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

நடிகர் சரத்குமார், பிரபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் சரத்குமார் உடன் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படத்தை நடிகர் மனோபாலா வெளியிட்டு இருப்பது விஜய் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஹைதராபாத்தில் சூட்டிங்

ஹைதராபாத்தில் சூட்டிங்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய் மற்றும் அஜித் உள்ளிட்டோர் தொடர்ந்து தங்கள் படங்களின் படப்பிடிப்புகளை ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியிலே நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டிலேயே படப்பிடிப்பை நடத்தினால் இங்குள்ள சினிமா தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனக் கூறினாலும், ரசிகர்கள் தொந்தரவு காரணமாக பிற மாநிலங்களில் படப்பிடிப்பு நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

நட்சத்திர பட்டாளம்

நட்சத்திர பட்டாளம்

ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தை போலவே விஜய்யின் தளபதி 66 படத்தில் அதிகளவிலான நட்சத்திர பட்டாளம் இணைந்துள்ளது. அனைத்து நடிகர்களுக்கான கதாபாத்திரங்களை ஸ்ட்ராங் படுத்துவாரா இயக்குநர் அல்லது நடிகர் விஜய்க்கு மட்டுமே ஒட்டுமொத்த ஸ்க்ரீன் ஸ்பேஸ் கிடைக்குமா? என்கிற கேள்விகள் வழக்கம்போல கிளம்பி உள்ளன. சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, சங்கீதா, யோகி பாபு, ஸ்ரீகாந்த், சம்யுக்தா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

சரத்குமார் போலீஸா

சரத்குமார் போலீஸா

தளபதி 66 படத்தில் விஜய்க்கு அப்பாவாக சரத்குமார் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போலீஸ் கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கிறாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு காரணம் நடிகர் மனோபாலா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் தான்.

தளபதி 66 சூட்டிங் ஸ்பாட்டா

தளபதி 66 சூட்டிங் ஸ்பாட்டா

மனோபாலா தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சரத்குமார் மற்றும் தயாரிப்பாளர் தேனப்பன் உடன் இருக்கும் ஒரு சூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த விஜய் ரசிகர்கள் இது தளபதி 66 படத்தின் சூட்டிங் ஸ்பாட்டா என்றும் சரத்குமார் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா? நீங்களும் தளபதி 66 படத்தில் ஆன்போர்டா என கேட்டு வருகின்றனர். ஆனால், எந்த படத்தின் படப்பிடிப்பு என்பதை மனோபாலா கூறவில்லை.

Recommended Video

இந்த மாதிரி படத்தை புது டைரக்டர் எப்படி Handle பண்ணுவாரு னு யோசிச்சேன் |Ranga| Sibiraj
நடிகரான தயாரிப்பாளர்

நடிகரான தயாரிப்பாளர்

கமல்ஹாசனின் காதலா காதலா, பம்மல் கே சம்பந்தம், பஞ்ச தந்திரம், சிம்புவின் வல்லவன், இயக்குநர் ராமின் பேரன்பு உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் தேனப்பன் நடிகராக மாறி உள்ளார் என்கிற அப்டேட்டையும் நடிகர் மனோபாலா இந்த புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X