Mansoor ali khan: தேசிய கீதத்தை அவமதித்தேனா? அடுத்த சர்ச்சையில் சிக்கிய மன்சூர் அலிகான்!
சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் தேசிய கீதத்தை அவமதித்துவிட்டதாக மற்றொரு சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் உருவான லியோ படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் பெற்றி பெற்றது.

தற்போது மன்சூர் அலிகான் சரக்கு படத்தை தயாரித்து நடித்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
மன்சூர் அலிகான்: சரக்கு படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய மன்சூர் அலிகான், முன்பெல்லாம் வில்லனாக பல திரைப்படத்தில் நடித்திருக்கிறேன் அப்போது பல ரேப் சீன்கள் வரும். ஆனால், இப்போதெல்லாம் வில்லனாக நடிக்க வாய்ப்பே வருவதில்லை என்றார். மேலும், லியோ படத்தில் ரேப் சீன் இருக்கும், த்ரிஷாவை பெட்டில் தூக்கி போடலாம் என்று நினைத்தேன் ஆனால், அது நடக்கவில்லை என்றார்.
நடிகர் சங்கம் கண்டனம்: மன்சூர் அலிகானின் இந்த மோசமான பேச்சு இணையத்தில் பெரும் புயலை கிளப்பியதை அடுத்து, நடிகை திரிஷா தனது கண்டனத்தை தெரிவித்து, இனி வரும் நாட்களில் அவருடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் என்றார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், நடிகர் சங்கம் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நேற்று அறிக்கை வெளியிட்டது.
மன்னிப்பு கேட்க மாட்டேன்: இதையடுத்து, இன்று செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான், நான் நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் என்பது அவர்களுக்கு தெரியும். என்னிடம் எந்த ஒரு விளக்கத்தையும் அவர்கள் கேட்கவில்லை. போனிலும் என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. ஒரு சங்கம் இப்படி செய்யலாமா? நேற்று வெளியிட்ட அறிக்கையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். நான் எதுக்கு மன்னிப்பு கேட்கணும், நான் மன்னிப்பு கேட்கிற ஜாதி இல்லை.
வாபஸ் பெற வேண்டும்: நடிகர் சங்கம் மிகப்பெரிய இமாலய தவறை செய்துள்ளது. நான் அமைதி காத்துக் கொண்டு இருக்கிறேன். எரிமலையாக குமுறினேன் என்றால் எல்லாம் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று கோவணத்தை உருவி விட்றுவேன். நான்கு மணி நேரத்தில் அந்த அறிக்கையை வாபஸ் பெறுங்கள் என்று ஆவேசமாக பேசி இருந்தார்.
தேசிய கீதத்தை அவமதித்தேனா? செய்தியாளர்கள் சந்திப்பில் பலர் கேட்ட கேள்விக்கு ஏடாகூடமாக மன்சூர் அலிகான் பதில் அளித்தார். ஏன் சார் இப்படி பேசுறீங்க என்று கேட்டதற்கு நான் இப்படித்தான் பேசுவேன் என்று கூறியதால், பத்திரிக்கையாளர்கள் அவர் மீது கடுப்பில் இருந்தனர். இதையடுத்து, செய்தியாளர் சந்திப்பு முடிந்து தேசிய கீதம் ஒளிபரப்பானது. அப்போது மன்சூர் அலிகான் கைகளை தூக்கி ஆவேசமாக பாடினார்.
இதைப்பார்த்துக்கொண்டிருந்த செய்தியாளர் ஒருவர், தேசிய கீதத்தை இப்படித்தான் பாடுவீங்களா… அவமரியாதை செய்கிறீர்கள் என்று குரல் எழுப்பினார்கள். அப்போது இன்னும் டென்ஷனான மன்சூர் அலிகான், நான் தேசிய கீதத்தை எழுந்து நின்று பாடுகிறேன், நான் அவமதித்துவிட்டேன் என்று சொன்னால் எப்படி என்று விவாதம் செய்தார்.


Click it and Unblock the Notifications











